தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோடை வெயில் காரணமாக இந்த ஆண்டு வகுப்புகள் பள்ளிகளில் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது.
பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன. பல பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் வெவ்வேறு வகுப்புகளுக்கு அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் 1-5, 5-10, 11, 12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வுகள் செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுகள் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதி தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதி என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
காலை உணவு: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
"நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 28.02.2023 முதல் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியின் படி 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் பயனடைந்து வருகின்றனர். 41,225 குழந்தைகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள்கள் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications