"SC பசங்கனாலே பிரச்னைதான்.. BC-யா, MBCயான்னு தெரிஞ்சிடும்.. "விஷம்" கக்கிய அனுராதா.. அடுத்த விசாரணை?
பச்சையப்பன் கல்லூரி பேராசிரியையிடம் விசாரணை எப்போது நடத்தப்படும்
சென்னை: பச்சையப்பா கல்லூரி பேராசிரியை அனுராதா மீது, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கல்லூரி நிர்வாகம் என்ன செய்ய போகிறது என்ற கேள்விகள் இணையத்தை வட்டமடிக்கின்றன.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் அனுராதா, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசும் ஆடியோ ஒன்று வெளியானது.
கல்வியை புகட்டும் நிறுவனங்களில், இப்படி ஒரு சாதி வெறியா? என்று அந்த ஆடியோவை கேட்டு தமிழக மக்கள் உறைந்து போயுள்ளனர்.

BC-யா? MBC-யா?
அந்த ஆடியோ பதிவில், "மூஞ்சியை பார்த்தாலே BC-யா? MBC-யா அல்லது SC-யா என்று தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்று கூட எனக்கு தெரியாது. ஆமா, நீ என்ன கம்யூனிட்டி?' என்று கேட்டு தமிழ்த்துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்து அந்த ஆடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி அனுராதா பேசுவது இது முதல்முறை கிடையாது.. கடந்த வருடமும் இப்படித்தான், சாதியப்பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் அனுராதா ஈடுபட்டதாகவும், அதனால்தான், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா காலேஜுக்கு அவரை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள் என்றும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.

"COMMUNITY"
இந்த ஆடியோவின் பரபரப்பு இன்னமும் ஓயாத நிலையில், அனுராதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அவரது நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர்.. இதையடுத்து, இந்நிலையில் அந்த பேராசிரியை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வாய்மொழி விசாரணை
அக்கல்லூரியின் முதல்வர் கஸ்தூரி, வரும் திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது, பேராசிரியை அனுராதாவிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது ஆனால், எழுத்துப்பூர்வமான விசாரணைக்கு மட்டுமே ஆஜராவேன், இப்படி வாய்மொழி விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அனுராதா சொன்னதாக அப்போதே தகவல்களும் கசிந்தன.. எனினும், கல்லூரி நிர்வாகதம், இதற்காகவே விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.

லெட்டர்
அதேசமயம், எழுத்துப்பூர்வமாக, கல்லூரி தரப்பில் அனுராதாவுக்கு கடிதம் தயாராக உள்ளதாகவும், பேராசிரியர் அனுராதாவுக்கு எதிராக, ஒரே ஒரு பேராசிரியர் மட்டுத்தான் புகார் தந்துள்ள நிலையில், மாணவர்களோ அல்லது அமைப்புகளோ இதுவரை எந்தப்புகாரும் அளிக்கவில்லை என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.. இன்றுதான் கல்லூரி சார்பில் விசாரணை நடத்தப்படும் நாள்.. ஆனால், காலை முதல் இப்போது வரை அனுராதா விசாரணைக்கு ஆஜராகவில்லையாம்..

லீவு
மாலை 5 மணி வரை டைம் இருந்தும் அவர் இதுவரை கல்லூரிக்கு வரவில்லை என்கிறார்கள்.. மேலும், இன்று அனுராதா கல்லூரிக்கு லீவு எடுத்துள்ளாராம்.. விடுமுறையில் உள்ளதால், விசாரணைக்கு ஆஜராகவில்லையா? அல்லது விசாரணை என்பதால் லீவு எடுத்துக் கொண்டுவிட்டாரா என்பது யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க போகிறது? கல்லூரி நிர்வாகம் என்ன செய்ய போகிறது? என்ற எதிர்ப்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications