பள்ளிக்கூடத்தை எப்ப திறக்கலாம்.. ஒரு ஐடியா கொடுங்க.. மாநிலங்களைக் கேட்கும் மத்திய அரசு!
சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக கல்வித் துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக தெரிகிறது.
கொரோனா நோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. சுமார் 4 மாதங்களாகியும் மாணவர்கள் பள்ளிச் செல்ல முடியாமல் வீடுகளில் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில பெற்றோர் அடுத்த ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் இன்னும் சிலர் குறைவான மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்றும் ஆலோசனைகளை கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பெறறோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்டு அனுப்ப வேண்டும்.
அதில் பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் எப்போது திறக்கலாம், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பள்ளிகளில் செய்ய வேண்டியவை எவை, பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன ஆகியவை குறித்து கருத்துகளை கேட்டு [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை வைத்து பெற்றோரிடம் தமிழக கல்வித் துறை கருத்துகளை கேட்டுள்ளது. இவற்றை தொகுத்து மத்திய அரசுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு மட்டுமில்லை, பெற்றோரும் நேரடியாக தங்கள் கருத்துகளை இந்த ஈமெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
ஆந்திரா செப்டம்பர் 5-ஆம் தேதியும் கேரளா ஆகஸ்ட் 31-க்கு பிறகும் கர்நாடகம் செப்டம்பர் 1-ஆம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கடந்த 15-ஆம் தேதி மாநில கல்வித் துறை செயலாளர்களுடனான ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழகமும் தெலுங்கானாவும் மட்டுமே இதுகுறித்து முடிவு செய்யவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications