Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாந்து பார்த்தால்.. செம வியப்பு.. சென்னையில் எப்போ தொடங்குது பூந்தமல்லி - போரூர் மெட்ரோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் பூந்தமல்லி - போரூர் வழித்தடம் (Corridor 4) டிசம்பரில் அல்லாமல், ஜனவரி மாதம் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வழிகள் அமைப்பதில் தாமதம், அத்துடன் தேவையான அனுமதிச் சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

metro metro chennai

பூந்தமல்லி - போரூர் வழித்தடம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ்வரும் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO), அத்துடன் ரயில்வே வாரியத்திடம் இருந்து சில கட்டாய அனுமதிகள் இன்னும் பெண்டிங்கில் உள்ளன. இவை இல்லாமல் ரயில் சேவைகளைத் தொடங்க இயலாது.

இதுகுறித்து ஓர் அதிகாரி கூறுகையில், "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திடம் விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளோம். ரயில்வே வாரியம் சிக்னல் அனுமதியை வழங்கி, RDSO வேகச் சான்றிதழ்களை டிசம்பர் 8 அல்லது 9 ஆம் தேதிக்குள் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இந்த அனுமதிகள் கிடைத்த பின், CMRL ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் (CRS) ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். RDSO வேகச் சான்றிதழ் மற்றும் ISI சான்றிதழுடன் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்ய CRS அழைக்கப்படுவார்.

மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை

CRS முதலில் ஆவணங்களை சரிபார்த்து, பின்னர் வழித்தடத்தை ஆய்வு மேற்கொள்ளும். RDSO வேகச் சான்றிதழ் அடுத்த வாரத்தில் கிடைத்துவிட்டால், இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் CRS ஆய்வை திட்டமிட முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். CRS ஆய்வுக்குப் பிறகு, ரயில் சேவையை பொதுமக்களுக்குத் திறப்பதற்கான இறுதி அனுமதி சான்றிதழை வழங்கும். இதுவே ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான அத்தியாவசிய இறுதிக்கட்ட ஒப்புதல் ஆகும்.

பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் உள்ள நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வழிகளைக் கட்டுவதில் கணிசமான பணிகள் எஞ்சியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களுக்குள் இதை முடிப்பது மிகவும் சவாலானது என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு அதிகாரி ஒருவர், "பூந்தமல்லிக்கும் போரூருக்கும் இடையே 93 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதிக மனிதவளத்தை பயன்படுத்தி, டிசம்பர் இறுதிக்குள் கட்டுமானத்தைப் பூர்த்தி செய்வோம்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

கட்டுமானப் பணிகள் நிறைவு

குறிப்பாக, காரையாஞ்சாவடி மற்றும் குமணஞ்சாவடி ஆகிய இரண்டு நிலையங்களின் நுழைவு/வெளியேறும் கட்டுமானங்களை முடிப்பது கடினம் என்று வட்டாரங்கள் குறிப்பிட்டன. இருப்பினும், இந்த இரு நிலையங்களின் இரண்டு நுழைவு/வெளியேறும் வழிகளில் ஒன்று டிசம்பர் இறுதிக்குள் தயாராகிவிடும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தேவையான அனைத்து அனுமதிகளும் வந்தடைந்தவுடன், மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்கி வைப்பதற்கான தேதியை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து CMRL நிறுவனம் கோர வேண்டும்.

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்

₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பணிகள் தீவிரம்

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.

பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+