வண்டலூர் விருந்தாளி .. கிளாம்பாக்கத்திற்கு தாவி.. ஊரப்பாக்கத்தில் ஊர் சுற்றும் அனுமன்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ் ஸ்டாண்ட் திறந்ததில் இருந்தே கிளாம்பாக்கத்தை பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பக்கத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவை பற்றி பலர் மறந்துவிட்டார்கள். அங்கிருந்து தப்பி ஓடிய 2 அனுமன் குரங்குகள் ஊரப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிகின்றன. அவற்றை ஊழியர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் அமைந்துள்ள இடம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள இடம் ஆகும். வண்டலூர் சாலையில் சிக்னலுக்கு இந்த பக்கம் இருந்த பெரிய காட்டில் தான் பேருந்து நிலையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. முன்பு வண்டலூரின் அடையாளமாக வண்டலூர் உயிரியல் பூங்காதான் தினசரி பேசுபொருளாக பேசப்பட்டு வந்தது.

Where are the 2 Hanuman monkeys who escaped from Vandalur Zoo?

இப்போது கிளாம்பாக்கம் அந்த இடத்தை பிடித்திருக்கிறது. அதே நேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பற்றி பரபரப்பாக பலர் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த சம்பவம் மீண்டும் உயிரியல் பூங்காவை பேசுபொருளாக்கி உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அந்த குரங்குகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்காக பூங்காவில் உள்ள விலங்குகள் மருத்துவமனை அருகே தனிமைப்படுத்தப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டு ஊழியர்கள் பராமரித்து வந்தார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 2 அனுமன் குரங்குகள் தப்பித்து பூங்காவுக்குள் ஓடியது. பூங்கா ஊழியர்கள் தப்பி ஓடிய அனுமன் குரங்குகளை பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்கள். ஆனால் பூங்காவில் அனுமன் குரங்குகள் இல்லை என்பது தெரிய வந்தது.

நேற்று மாலை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிய முகத்தோற்றம் கொண்ட 2 குரங்குகள் சுற்றி வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பூங்கா ஊழியர்கள் ஊரப்பாக்கத்துக்கு சென்று பார்த்தபோது அது பூங்காவில் இருந்து தப்பிய அனுமன் குரங்குகள் என்பது தெரியவந்தது.

உயரமான மரத்தின் உச்சியில் இருந்த அனுமன் குரங்குகளை பூங்கா ஊழியர்கள் நவீன துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றார்கள். அந்த குரங்குகள் ஊழியர்களுக்கு ஆட்டம் காட்டிவிட்டு மரத்துக்கு மரம் தாவி தப்பிச்சென்று கொண்டே இருந்தது. இதனால் அனுமன் குரங்குகளை பூங்கா ஊழியர்களால் பிடிக்க முடியவில்லை. மேலும் இரவு நேரம் என்பதால் அனுமன் குரங்கை பிடிக்காமல் ஊழியர்கள் நேற்று திரும்பிச் சென்றார்கள். இன்று பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+