"ஓ காட்".. பக்கத்தில படுத்திருந்த மனைவியை காணோமாமே.. ஸ்டேஷனுக்கு பதறிஓடிய கணவன்.. கடைசியில பார்த்தால்?
மாயமான தாம்பரசென்னை: பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த மனைவியை திடீரென காணாமல் பதறிப்போய் விட்டார் கணவர்.. கடைசியில் பார்த்தால் இப்படியா நடக்கணும்?தமிழகத்தில் ம் பெண்ணின் மோசடி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
சென்னை: பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த மனைவியை திடீரென காணாமல் பதறிப்போய் விட்டார் கணவர்.. கடைசியில் பார்த்தால் இப்படியா நடக்கணும்?
தமிழகத்தில் நாளுக்கு நாள் திருமண மோசடிகள் அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இப்படிப்பட்ட திருமண மோசடிகளை செய்வது இளம் பெண்களே என்பது அதற்குமேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கி சீரழிவது "அப்பாவி ஆண்கள்" என்பது வருந்தத்தக்கது.. அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கிப்போய், கவர்ச்சி வலைகளில் மாட்டிக் கொண்டு, மானத்தையும் பணத்தையும் இழந்து பரிதவித்துவரும் ஆண்கள் பல பேர் உருவாகி விட்டார்கள்.

மேரேஜ் புரோக்கர்கள்
குறிப்பாக நாமக்கல், சேலம், தேனி, குமரி மாவட்டங்களில் திருமண மோசடிகள் பெருகிவருகின்றன.. இந்த மோசடிகளை இளம்பெண்கள் தனித்து செய்வதில்லை.. இதற்காக ஒரு கூட்டமே உண்டு.. "மேரேஜ் புரோக்கர்கள்" என்று இந்த திருடர்களுக்கு கவுரவமான பெயர்களும் உண்டு.. ஒரு குறிப்பிட்ட வசதி படைத்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குறி வைக்கிறது இந்த கும்பல்.. இதற்கு காரணம், பணமோசடி செய்தாலும், குடும்ப கவுரவம் கருதி வெளியே புகார் தரமாட்டார்கள் என்பதால்தான், துணிந்து இளம்பெண்களை திருமண மோசடிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.

முதலிரவு
கடந்த ஒரு மாதத்தில், நிறைய இளம்பெண்கள் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளனர்.. போலீசில் பரபரப்பு வாக்குமூலங்களையும் அவர்கள் தந்து வருகிறார்கள்.. இதில் பெரும்பாலான பெண்கள், திருமணம் செய்ய வரன்தேடி வரும் இளைஞர்களுக்கு வலை வீசுவதுடன், அந்த இளைஞர்கள் செலவிலேயே திருமணத்தையும் செய்துகொண்டு, அன்றைய தினம் முதலிரவு முடிந்ததுமே அல்லது மறுநாளே, வீட்டில் உள்ளதை சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவதாக வாக்குமூலங்களில் சொல்லி வருகிறார்கள்.. இப்போதும் ஒரு இளைஞர் சிக்கிவிட்டார்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

அநாதை
மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன்.. 30 வயதாகிறது.. ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் அபிநயா.. 28 வயதாகிறது.. இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக கனிதுள்ளது.. சில நாட்கள் சென்றதுமே, திருமண பேச்சை அபிநயா எடுத்துள்ளார்.. அதற்கு நடராஜனும் சம்மதம் சொன்னதுடன், வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் பேசுமாறு சொன்னார்.. அதற்கு அபிநயா, தனக்கென்று யாருமில்லை, தான் ஒரு அனாதை என்று சொல்லி உள்ளார்..

அட்ரஸ்ஸா
இதைக் கேட்டு மனமிறங்கிய நடராஜ், தன்னுடைய பெற்றோரிடம் இந்த காதலை பற்றி எடுத்து சொல்லி, கல்யாணத்துக்கும் சம்மதம் வாங்கினார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில், பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது.. தம்பதியும் மணவாழ்க்கையை சிறப்பாக தொடங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம், பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடீரென காணாமல் போய்விட்டதால் பதறி போனார்..

ஸ்விட்ச் ஆஃப்
இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கெங்கோ தேடி பார்த்தும், மனைவியை காணவில்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு பீரோவை திறந்து பார்த்தால், அங்கே 17 சவரன் நகையை காணோமாம்.. 20,000 ரொக்க பணமும் மிஸ்ஸிங்.. அப்போதுதான் அதிர்ந்து போன நடராஜன், தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு போன பெண் குறித்து புகார் தந்தார்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநயாவின் ஆதார் கார்டை கைப்பற்றி, அதிலுள்ள அட்ரஸுக்கு விரைந்துள்ளனர்... விரைவில் அபிநயா கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. ஆனாலும், அது உண்மையான அட்ரஸ்தானா? என்று தெரியவில்லையே..!!

நிறம் வெளுத்தது
ஆனால், திருமணம் முடிந்ததுமே தனக்கு குடும்பம் இருப்பதாகவும், ஆனால், காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்தால் கொந்தளித்து விடுவதால்தான் பொய் சொன்னதாகவும் அபிநயா நடராஜிடம் சொன்னாராம்.. எனினும், தன்னை திருமணம் செய்வதற்காகவே இப்படி ஒரு பொய்யை சொன்னதால், இதை நடராஜன் பெரிதுபடுத்தவில்லையாம்.. பிறகு திடீரென அபிநயா மாயமானதும்தான் அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பமே அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.. அந்த பெண்ணின் பெயர் அத்தனை நாளும் கயல்விழி என்றே பொய் சொல்லி வந்துள்ளார்.. பிறகுதான்அபிநயா என்பது உண்மையான பெயர் என தெரியவந்துள்ளது.. இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் பிறகுதான் நடராஜனுக்கு தெரியவந்துள்ளது.. அதனால் மதுரை போலீசாருக்கும் அபிநயா பற்றின தகவல் தரப்பட்டுள்ளதாம்.. சென்னை மற்றும் மதுரை போலீசார் அபிநயாவை தேடி வருகிறார்கள்.
-
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
Chennai Rain: அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் பிச்சு உதறப்போகுது மழை.. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்! -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்!










Click it and Unblock the Notifications