விஜய் கூட பரவாயில்லை போலயே.. தமிழ்நாட்டில் தலையை காட்டாமல் தவிர்க்கும் ராகுல் காந்தி! பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. ஆனால், இதுவரை பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி இங்கே வரவில்லை. இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ராகுல் எப்போது வருவார்? என்கிற பிளான் வெளியாகியிருக்கிறது.

ராகுல் காந்தி ஏப்.18ம் தேதி பிரச்சாரத்திற்காக வருகிறார் என்றும், இந்த பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rahul Gandhi

தமிழ்நாட்டின் தேர்தல் களம்

ஏப்.23ம் தேதி தேர்தல். ஊருக்கு முன்னர் அடித்து பிடித்து 28 சீட்களை வாங்கி சென்ற காங்கிரஸ், எல்லா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்த, தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டபோதும் கூட, தனது லிஸ்ட்டை வெளியிடாமல் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், பிரச்சாரத்திற்கு முக்கிய தலையான ராகுல் காந்தி எட்டி பார்க்காமல் இருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தீவிர பிரச்சாரம்

ராகுல் காந்தி எல்லோருக்கும் தெரிந்த முகம். தற்போது தமிழ்நாட்டில் விஜய் போன்ற சினிமா நட்சத்திரம் தேர்தல் களத்திற்கு வந்திருப்பது, களத்தின் தன்மையை மாற்றியிருக்கிறது. எனவே தீவிர பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் கட்சிகள் தங்களுக்காக பயன்படுத்தி வருகின்றன.

தலையை காட்டாத ராகுல் காந்தி

குறிப்பாக திமுக, ஒவ்வொரு கிரமமாக தனது பிரச்சாரத்தை விரிவுபடுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், ராகுல் காந்தி களத்திற்கே வராமல் இருப்பது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சோறு தண்ணீர் இல்லாமல், தேர்தல் வெற்றிக்காக.. தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி மட்டும் எட்டி பார்க்காமல் இருப்பது சரியா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரச்சார யுக்தி

இப்படி இருக்கையில்தான், ராகுல் காந்தியின் பிரச்சார திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்னர், அதாவது ஏப்.18ம் தேதி பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த பிரச்சார பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திக்கவில்லை என்பதுதான்.

விஜய்யே பரவாயில்லையே

தொகுதி பங்கீட்டிலும், மற்ற கட்சிகள் பொறாமைப்படும் அளவுக்கு காங்கிரஸுக்கு அள்ளிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. தோழமை கட்சிகளுக்குதான் கிள்ளி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் ஏன் ராகுல் காந்தி, ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து வரும் விஜய் கூட, எப்போதாவது பொதுவெளியில் தலை காட்டுகிறார். ஆனால், ராகல் காந்தி அப்படி கூட இங்கு வரவில்லையே! என்று திமுகவினர் கவலை எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+