ஒரே நாள், ஒரே நேரத்தில் 2 பேருமே இல்லை.. தமிழக அரசின் உளவுத்துறை தலைவர் எங்கே? கவனிக்கும் "ராஜ்பவன்"
சென்னை: தமிழக அரசின் உள்துறை தலைவர் ஐஜி செந்தில்வேலன் குறித்த பரபரப்புதான் கோட்டையில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.

சென்னை ஏர்போர்ட்: சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்பி வைத்திருந்தனர்.. முதல்வருடன் அவரது மனைவி துர்கா, தொழில் துறை அமைச்சர் ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தொழில் துறை செயலாளர் அருண் ராய், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோரும் ஸ்பெயின் சென்றிருக்கிறார்கள்.
ஐஜி செந்தில் வேலன்: அதுபோலவே, தமிழக அரசின் உளவுத்துறை தலைவரான ஐ.ஜி. செந்தில்வேலனும், முதல்வர் ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.. இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. முதல்வரும், உளவுத்துறை தலைவரும் ஒரே சமயத்தில் மாநிலத்தில் இல்லாதது சரியானது கிடையாது என்கிற விவாதமும் உயரதிகாரிகள் மத்தியில் கடந்த 3 நாட்களாகவே அலையடித்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கு காரணம், உளவுத்துறை ஐஜி பணி என்பது மிக மிக முக்கியமானது. நம்முடைய தமிழகத்தில், எந்த மூலையில், என்ன சம்பவம் நடந்தாலும் அதற்கான பின்னணிகளை கண்டறிந்து அரசுக்கு ரிப்போர்ட் தருவது உளவுத்துறை ஐஜியின் பணியாகும்.. அதுமட்டுமில்லை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது, அரசியல் மூவ்மென்ட்டுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என மிக முக்கியமான பணிகளும் உளவுத்துறை ஐஜியின் கையில்தான் உள்ளன.
பொறுப்புகள்: இப்பேர்ப்பட்ட பணிகளை செய்யக்கூடிய சரியான நபர் செந்தில்வேலன்தான் என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், முதல்வர் ஸ்டாலினுக்கு சிபாரிசு செய்திருந்தார்கள்.. இந்த அடிப்படையில், செந்தில் வேலனும் பணியில் நியமிக்கப்பட்டார்.
"மக்களுக்கு எதிராக, சட்டத்துக்கு விரோதமாக உள்ள எல்லா விஷயங்களையும் முடக்க வேண்டும், நல்லவர்கள் மட்டும்தான் ரோட்டில் தைரியமாக நடமாட வேண்டும். அப்படி ஒரு சூழல் வரும் வரை எனக்கு நிம்மதியான தூக்கம் கிடையாது" என்று ஒரு முறை பேட்டியில் சொல்லியிருந்தார் செந்தில்வேலன்..
என்ன காரணம்: அதற்கேற்றபடி செந்தில் வேலனும் தன்னுடைய பணிகளை திறன்படவே செய்து வருகிறார். எனினும், தற்சமயம் முதல்வர், வெளிநாடு சென்றுள்ள நேரத்தில், உள்துறை ஐஜி தமிழகத்தில் இருந்திருக்க வேண்டுமே, முதல்வருடன் இவரும் ஏன் செல்ல வேண்டும் என்பதே கோட்டையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம்.
ஏற்கனவே, சென்னை, மதுரை ஐஜிக்கள் இருவருமே நேற்றையை பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கான உத்தரவு போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தரரெட்டி பெயரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு, உள்துறை செயலாளர் பெயரில்தான் வரவேண்டும். ஆனால், பனீந்தரரெட்டி பெயரில் வந்திருக்கிறது. இதுதான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சர்ச்சைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.
சர்ச்சைகள்: இந்த சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும்போது, உளவுத்துறை தலைவர் ஐ.ஜி. செந்தில் வேலவன் பயணம் குறித்த சர்ச்சையும் கிளம்பி உள்ளது.. தமிழக அரசு இயந்திரத்தில் எந்த ஒரு சர்ச்சை கிளம்பினாலும் அதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் காத்து கொண்டிருக்கும் சூழலில், ஐஜியின் இந்த பயணம் தேவையா? என்றும் கேள்விகள் எழுகிறதாம்.. அதற்கேற்றவாறு, இதனை உற்று கவனித்து வருகிற ராஜ்பவன், மாநிலத்தின் சட்ட ஒழுங்கினை கழுகு பார்வையோடு பார்த்து வருகிறதாம் !!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications