கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா? அழுக்கு நோட்டு, சேதமடைந்த ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு கண்டிஷன் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழிந்த நோட்டுகள் நம்மிடம் கிடைத்துவிட்டால், அதை என்ன செய்வது? அல்லது பழைய ரூபாய் நோட்டுகள் நம் கைக்கு வந்துவிட்டால், அதை எப்படி மாற்ற வேண்டும்? என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் எழலாம். அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

திடீரென நம்மிடம் எப்படியோ கிழிந்த நோட்டுக்கள், வந்துவிடலாம்.. சேதமடைந்த நோட்டுகளை வங்கியில் பெற்றுக் கொள்வார்களா? அதை எப்படி வங்கியில் மாற்றுவது? கிழிந்த நோட்டுகளை எவ்வளவு தொகைக்கு மாற்ற முடியும்? என்பதிலும் சிலருக்கு கேள்வி எழலாம்.

rbi

துண்டு நோட்டு: இதுபோன்ற நோட்டுகளை மாற்றுவதற்காகவே ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வகுத்துள்ளது.. 2 துண்டாய் ரூபாய் நோட்டு கிழிந்திருந்தாலும், அல்லது முனைகள் மட்டும் எண்களை கொண்ட நோட்டுகளாக இருந்தாலும் அவை ரூபாய் நோட்டுகளாகவே கருதப்படும்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், இந்த எண்கள் மட்டும் சேதமடைய கூடாது. மற்றபடி, அசோகா பில்லர் சின்னம், மகாத்மா காந்தி படம், கேரண்டி, பிராமிஸ் கிளாஸ், சிக்னேச்சர், வாட்டர் மார்க் படம், அத்தாரிட்டி போன்றவை சேதமடைந்ருந்தாலும், அதனை மாற்றிக் கொள்ளலாம்.

அழுக்கு நோட்டு: அப்படி எண்கள் சேதமடையாமல் இருந்தால், அருகிலுள்ள பொதுத்துறை, தனியார் என எந்த வங்கிகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.. இதற்கெல்லாம் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அவசியமில்லை.. ரூபாய் நோட்டுகள் அழுக்காக இருந்தால், அதிலும் சீரியல் எண் படிப்பதற்கு ஏற்ற நிலையில் இருந்தால், அதை தந்துவிட்டு, புதிய நோட்டு பெற்றுக்கொள்ளலாம்..

அதேபோல, சிதைந்த நோட்டுகளையும் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.. இந்த சிதைந்த நோட்டுகளுக்கு Mutilated notes என்று சொல்வார்கள்.. அதாவது, ஒரு நோட்டு 2-க்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்தாலோ அல்லது அதன் ஒரு பகுதி தொலைந்திருந்தாலோ , அது சிதைந்த நோட்டுகளாகவே கருதப்படும்.

சிதைந்த நோட்டு: ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டதாகவோ, மாற்றப்பட்டதாகவோ, சிதைக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.. வேண்டுமென்றே வெட்டப்பட்ட நோட்டுகளை துல்லியமாக அதிகாரிகள் கண்டறிந்து விடுவார்கள். இதுபோன்ற நோட்டுகளையும் உங்களால் மாற்ற முடியாது.

அதேபோல, அதிக அளவிலான நோட்டுகளையும் ஆர்பிஐ உங்களுக்கு மாற்றித்தராது.. ஒரு நபர், ஒரு நாளைக்கு ரூ. 5000 ரூபாய், மதிப்புடைய சேதமடைந்த நோட்டுகளை இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அதே நேரத்தில் ரூ. 5000 ரூபாய்க்கு மேல் சேதமடைந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு ரசீதுகள் தேவைப்படும்.. இதற்கென சேவை கட்டணங்களும் விதிக்கப்படலாம்.. அதேசமயம், நீங்கள் மாற்ற வேண்டிய தொகை ரூ.50,000-க்கும் மேல் என்றால், உங்களது அடையாள சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க நேரிடும்.

கிழிந்த நோட்டு: மிகமிக மோசமான சேதமடைந்த நோட்டுகள் என்றால், அது தீயினால் எரிந்து சேதமடைந்த நோட்டுகளை சொல்லலாம். இதனை எந்த வங்கி கிளைகளிலும் மாற்ற முடியாது. இதுபோன்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் விநியோக அலுவலகத்தில் மட்டுமே மாற்ற முடியும். அதுவும், எதிர்பாராதவிதமாக தீயில் எரிந்ததாக இருந்தால் மட்டுமே அவை மாற்றிக் கொள்ளப்படும்.. வேண்டுமென்றே ரூபாய் நோட்டுகள் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தால், அது மாற்றப்படாது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+