கவனிச்சீங்களா.. இது ஒன்றுக்குதான் மோடி பயப்படறார்.. பாஜகவில் தான் இது நடக்கும்.. ப.சிதம்பரம் கிண்டல்
மோடியை விமர்சித்து ப சிதம்பரம் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "மத்திய அமைச்சரவையைக் கூட்டாமல், ஒப்புதல் பெறாமல் வேளாண் அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்... மத்திய அமைச்சரவை முன் அனுமதி பெறாமல், அமைச்சரவையைக் கூட்டாமல் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிடுவது பாஜக அரசில் மட்டும்தான் நடக்கும்'' என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
3 புதிய வேளாண் சட்டங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது... இந்த சட்டம் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்டங்களினால் எந்தவித பிரயோஜனமும் தங்களுக்கு இல்லை என்றும் விவசாயிகள் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்...

போராட்டம்
இந்த 2 வருட காலத்தில் இந்தியாவை அதிர வைத்தது இந்த விவசாயிகளின் போராட்டம் என்றே சொல்லலாம்... இந்நிலையில், இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்றைய தினம் அறிவித்தார்.. மத்தியில் மோடி அரசு கொண்டு வந்த சில சட்டங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன என்பதால், முதன்முறையாக, தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக பாஜக அரசு அறிவித்ததாக கருதப்பட்டது.

தேச நலன்
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றைய தினம் கருத்து கூறியிருந்தார்.. பாஜக தலைவர் ஒருவர் சொன்னால், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை இயற்றினார்களாம், தேச நலனுக்காக அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுகிறார்களாம். மக்களை எவ்வளவு ஏமாளிகள் என்று பாஜக கருதுகிறது பாருங்கள்... விவசாயிகள் நலன் வேறு தேச நலன் வேறு என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

பிரதமர் மோடி
இந்திய விவசாயிகள் அந்நியர்கள் அல்லது இந்திய விவசாயிகள் எதிரிகள் என்று பாஜக வினர் கருதுகிறார்களா? வேளாண் சட்டங்கள் தவறு, அரசின் முடிவு தவறு, பல நூறு விவசாயிகள் இறந்ததற்கு அரசு மன்னிப்புக் கேட்கிறது என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவர் மனமும் எண்ணமும் உண்மையில் மாறி இருக்கின்றன என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படிச் சொல்லவில்லையே?

தேர்தல் - பாஜக
எதிர்வரும் 5 மாநிலத் தேர்தலில் பா ஜ க தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்த பிறகல்லவா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது? யாருக்கும் அஞ்சாத பிரதமர், நல்லவேளை தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார். ஜனநாயகம் பிழைத்து விடும் என்று இனி நம்பலாம்" என்று பதிவிட்டிருந்தார்.

அமித்ஷா
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் சிதம்பரம்.. அதில், "பிரதமர் மோடியின் மிகச் சிறந்த அரசியல் திறன் குறித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்த அவரின் அறிவிப்பையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்துள்ளார்... பாஜக தேசியத் தலைவரோ, விவசாயிகள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார்.

ஒப்புதல்
விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.. கடந்த 15 மாதங்களாக இந்த தகுதிவாய்ந்த தலைவர்கள், தகுதியான, இந்த நல்ல ஆலோசனைகளை சொல்லாமல் எங்கே போனாங்க? நீங்கள் ஒன்று கவனித்தீர்களா? மத்திய அமைச்சரவையை கூட்டாமல், ஒப்புதலைகூட பெறாமல், இப்படி ஒரு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்... மத்திய அமைச்சரவை முன் அனுமதி பெறாமல், அமைச்சரவையைக் கூட்டாமல் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிடுவதெல்லாம், பாஜக அரசில் மட்டும்தான் நடக்கும்'' என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications