அந்த 2 திமுக புள்ளி யார் தெரியுமா.. நாள் குறிச்சாச்சு.. ரிலீஸ் பண்ண போகிறேன்.. அண்ணாமலை தடதட
2 துறைகளின் ஊழல்களை அம்பலப்படுத்த போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை: இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ம் தேதி வெளியிட போகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியை புகழ்வதற்காக பறையா (Pariah) என்ற சொல்லை பயன்படுத்தி புதிய சர்ச்சையில் அண்ணாமலை சிக்கி உள்ளார்.
இந்த விஷயத்தை விசிக கையில் எடுத்துள்ளது.. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

கீழ்சாதி
அதில், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.

பறையா வார்த்தை
இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், தமிழக பாஜக அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, பறையா என்ற வார்த்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அதேபோல திமுக அரசு செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.. அதற்கு அண்ணாமலை தந்த பதில்கள்தான் இவை:

பறையா
PARAIYA அந்த வார்த்தை ஆங்கில டிக்ஷனரியில், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி எதை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள்.. குறிப்பாக, 2014-க்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது? 2014-க்கு பிறகு எப்படி இருக்கிறது என்பதை குறிப்பதற்காக ட்விட்டரில் நான் பயன்படுத்திய வார்த்தை அது.. இதை, சம்பந்தமேயில்லாத, ஒரு சாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சிக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இது சம்பந்தமாக புகார் தந்திருக்கிறார்கள்.. இந்த புகாரை வாங்கிய காவல்துறையே, டிக்ஷனரி ஒன்னு வாங்கி, அதுக்கு என்ன அர்த்தம் என்பதை பார்த்தால், அவங்களுக்கே விடை தெரியும்.

டேஞ்சர் - கஞ்சா
அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று திமுகவினர் சொல்கிறார்கள்.. நாங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தவிதமான இடர்பாடுகளையும் கொடுக்கவில்லை.. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறோம் என்றால், அது அன்றாடம் நடக்கும் டேட்டாவை வைத்துதான்.. நடப்பதைதான் சொல்கிறோம்.. தமிழகத்தில் வன்முறை அதிகரித்து வருகிறது.. கஞ்சா ஆபரேஷன் 1.0, கஞ்சா ஆபரேஷன் 2.0 என்கிறார்களே ஏன்? அவங்களுக்கே தெரியும் கஞ்சா புழக்கம் டேஞ்சர் என்று.. திமுக அரசு, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவில்லை.. சென்னையில் 19 நாளில் 21 வன்முறை கேஸ் நடந்திருக்கு.. இதெல்லாம் எப்போ நாம தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறோம்?

செந்தில் பாலாஜி
அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று செந்தில் பாலாஜி சொல்லி உள்ளார்.. அவர் 5 கட்சி மாறினவர்.. காற்றில், நிலக்கரியில் என எல்லாவற்றிலும் ஊழலை விஞ்ஞான ரீதியாக செய்தவர்.. அவர் சொல்வதும் சரிதான்.. எனக்கு ஊழல் செய்யும் பக்குவம் இல்லை.. ஏன்னா, அண்ணாமலைக்கு ஊழலே செய்யவே தெரியாது.. அதனால் அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ரிலீஸ் பண்ண போறேன்
இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ம் தேதி வெளியிட உள்ளோம்... இது மிரட்டல் இல்லை.. திமுக 3,4ம் தேதி ரிலீஸ் பண்ண போறோம்.. அன்னைக்கு பிரஸ்மீட் வைக்கிறேன்.. இன்னும் ஒரு வாரம்தான்.. ஆதாரத்தோடு ஊழல்களை அறிவிக்க போகிறேன்.. பார்த்துட்டே இருங்க.. நான் என்ன செய்ய போறேன்னு.. ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும்.. மற்றபடி திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது" என்றார் அண்ணாமலை.

அதிமுக
அண்ணாமலையின் இந்த பேட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கனவே, அதிமுக திமுக மீது புகார்களை வாசித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக, இந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது, திமுக குறித்த புகார்கள், குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு, அதை மோடியிடமே தந்துவிட்டதாக கூறப்பட்டது.. ஒருபக்கம் அதிமுக திமுக குறித்து ரிப்போர்ட் தரும் அதேசமயத்தில்தான், அண்ணாமலையும் ஒரு பேட்டி தந்திருந்தார்..

2 பேர் யார்?
அதில், ஊழல் செய்த 2 அமைச்சர்களை அறிவிக்க போவதாக கூறியிருந்தார்.. இதை கேள்விப்பட்டதில் இருந்து திமுக கலங்கி போயுள்ளது.. அந்த 2 பேர் யார்? ஒருவேளை நம் மாவட்டத்தை சார்ந்த அமைச்சராக இருக்குமோ? என்ற பீதியும் சூழ்ந்து வருகிறது.. இப்போது, அந்த 2 துறைகளின் பெயர்களை அறிவிக்க நாளும் குறித்தாகிவிட்டது.. இதெல்லாம் நிஜமாகவே செய்ய போகிறாரா? அல்லது பரபரப்புக்கு சொல்கிறாரா? அல்லது திமுகவை கலங்கடிக்க சொல்கிறாரா? தெரியவில்லை.. இன்னும் 2 நாள்தான் இருக்கு.. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications