Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம சான்ஸ்! இதுவரை அப்ளை செய்யாதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாமா? அமைச்சர் தங்கம் வெளியிட்ட தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு இன்னொரு 'சான்ஸ்' உள்ளது. முன்னர் நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்க இயலாதோர் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அதன்படி ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக, விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அரசு வெளியிட்ட தகுதி நிபந்தனைகளின்படி, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

Who are unable to apply for magalir urimai thittam can apply: says Minister Thangam thennarasu

மீண்டும் சான்ஸ்: பயனாளிகளாக தேர்வு செய்யப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் முடிவு நிலை என்னவாயிற்று என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் அதில் தெரிவிக்கப்படும். நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம்.

ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ளை செய்யாமல் விட்டவர்கள்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாம்களின் போது உடல் நல பிரச்சனை அல்லது வெளியூர்களுக்குச் சென்றது அல்லது வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க இயலாதவர்கள், இனி புதிதாக விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி ஏராளமான குடும்பத் தலைவிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாமல் போனவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கு முழு தகுதி இருந்தும் அவர்களது பெயர்கள் விட்டுப் போயிருந்தால், அவர்களுக்கான குறைதீர்ப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Who are unable to apply for magalir urimai thittam can apply: says Minister Thangam thennarasu

அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்: தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஏதேனும் காரணத்தால் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் விடுபட்டு போயிருந்தால் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மைய தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான தேவை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் விடுபட்டுவிடக்கூடாது என முதலமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.

ஆக, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்திற்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் ஏற்கப்படாமல் போனவர்களுக்கு மேல்முறையீடு செய்ய இன்னொரு 'சான்ஸ்' இருப்பது போலவே, இதுவரை விண்ணப்பிக்காமல் தவறவிட்டவர்களுக்கும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு நிர்ணயித்துள்ள தகுதிக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகள், இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள், வங்கி கணக்குடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+