திமுக புதிய பொதுச்செயலாளர் யார்...? மார்ச் 29-ம் தேதி திமுக பொதுக்குழு
சென்னை: திமுக பொதுக்குழு வரும் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் திமுக புதிய பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திமுக பொதுக்குழு தொடர்பான எதிர்பார்ப்பும், பரபரப்பும் இப்போதே அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

மார்ச் 29-ம் தேதி
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே திமுக பொதுக்குழு வரும் மார்ச் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்கப்படும் என ஸ்டாலின் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனியர்கள்
தற்போதைய நிலவரப்படி துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மட்டுமே திமுக பொதுச்செயலாளருக்கான போட்டியில் உள்ளனர். ஒருவேளை துரைமுருகன் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்பட்டால் பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, பொன்முடி, ஆகியோர் முட்டி மோதி வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவரை பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும் ஸ்டாலின் டிக் அடிக்க கூடும் எனத் தெரிகிறது.

எதிர்பார்ப்பு
திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்தவர் பேராசிரியர் அன்பழகன். இந்நிலையில் அவரது மறைவால் அந்த இடத்தை புதிதாக யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது. கருணாநிதியின் எண்ண ஓட்டங்களை அறிந்து பேராசிரியர் செயல்பட்டதை போல், ஸ்டாலினின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயல்படக் கூடிய நபர் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்பது திமுக தொண்டர்களின் மனவோட்டமாக உள்ளது.

ஒத்திவைப்பு
இதனிடையே திமுக பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்க வரும் வாரம் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் பொதுக்குழுவை கூட்டலாம் என நினைத்தாராம் ஸ்டாலின். ஆனால் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பொதுவிடங்களில் கூடுவதையும், கூட்டம் சேர்ப்பதையும் தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருவதால் மார்ச் 29-ம் தேதியை தேர்வு செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications