பேட்ச் 2004 ஐஏஎஸ்.. முக்கிய தலையை தூக்கிவிட்டு ஸ்டாலின் இறக்கிய "தமிழர்".. யார் இந்த மாஸ்டர்மைண்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் முக்கியமான ஒரு துறைக்கான அதிகாரி மாற்றப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ias m k stalin

மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

முக்கிய அதிகாரி மாற்றம்: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையே மிக முக்கியமான பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரும் மாற்றப்பட்டு உள்ளார். அதன்படி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார்.

ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.

அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து இன்று மாறிய நிலையில் குமரகுருபரன் பதவி மாறி உள்ளார்.

மாற்றம்: சமீபத்தில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.

ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+