Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீறிட்ட "சபலம்".. கள்ளக்காதலனை சந்திக்க, ஆசைஆசையா கோவா ஹோட்டலுக்கு ஓடிய பெண்.. கடைசியில் பார்த்தால்?

கள்ளக்காதலனை சந்திக்க கோவா சென்றுள்ளார் பிரபலமான சென்னை டாக்டரின் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபேஸ்புக் காதலனுடன் ஜாலியாக இருக்க, கணவரை ஏமாற்றிவிட்டு, பிளைட்டை பிடித்து கோவா சென்றுள்ளார் ஒரு மனைவி.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?

Recommended Video

    திருச்சியை அதிரவைத்த சைக்கோ கொலைகாரன்…*Crime History

    ஒரு சம்பவத்தை நினைவுகூர வேண்டும்.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் ஆபாச வெப்சைட்டுகளால், குற்றங்கள் அதிகமாகின.. அதிலும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் பெருகின.

    அந்த சமயத்தில், பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அதிரடியில் தமிழக போலீஸ் தீவிரமானது.. இது சம்பந்தமான எச்சரிக்கையை பலமுறை விடுத்தது. அப்போதும், பெண் குழந்தைகள் மீதான பாதிப்பு குறையவில்லை.

    அனுபவங்கள்

    அனுபவங்கள்

    இப்படி ஒரு நடவடிக்கைக்கு பிறகு, குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோக்கள் நடமாட்டம் குறைந்தது.. இதற்கு காரணம் ரவி என்றால் மிகையல்ல. இதுபோல், எத்தனையோ அதிரடிகளை மேற்கொண்ட டிஜிபி ரவி சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார்.. இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு, தான் சந்தித்த வழக்குகளின் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.. அந்த வகையில், வித்தியாசமான சம்பவம் குறித்து, விளக்கி சொல்லி, விழிப்புணர்வுடன் இருக்க சொல்லி உள்ளார்.. ரவி சொன்ன அந்த சம்பவம் என்னவென்று பார்ப்போமா?

     அப்பாயிண்மென்ட்

    அப்பாயிண்மென்ட்

    அந்த இளம்பெண்ணின் பெயர் ரேவதி.. 30 வயதாகிறது.. மிகவும் அழகான பெண்.. இவரது கணவர் ஒரு பிரபலமான டாக்டர்.. சென்னையில் மருத்துவமனை உள்ளது.. இவரிடம் அப்பாயிண்ட்மென்ட் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை.. அந்த அளவுக்கு எந்நேரமும் பிஸியான டாக்டர்.. இதனால், தன்னுடைய குடும்பத்தையும், மனைவியையும் அவரால் சரிவர கவனிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது... கணவன் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், சலிப்படைந்த மனைவி, தன்னுடைய கவனத்தை சோஷியல் மீடியாவில் திருப்பி உள்ளார்.

     வீடியோ கால்

    வீடியோ கால்

    அப்போதுதான், பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.. இருவரும் மெசேஜ்களை அனுப்பி நாளுக்கு நாள் தங்கள் நட்பை வளர்த்தனர்.. ஒருகட்டத்தில் அந்த வாட்ஸ்அப் மெசேஜ்கள் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசும் அளவுக்கு வந்துவிட்டது.. கணவர் என்ன வேலை செய்கிறார் என்று அந்த இளைஞன் கேட்க, "என் கணவர் என்னை அதிகம் கண்டுகொள்வதில்லை" என்று மனைவி புலம்ப, இப்படித்தான், பர்சனல் விஷயங்கள் இவர்களுக்குள் ஆரம்பமாகி உள்ளன.

     எமோஷனல் பிளாக்மெயில்

    எமோஷனல் பிளாக்மெயில்

    ரேவதியை நெருங்கி செல்ல, இந்த ஒரு காரணம் ஒன்றே அந்த இளைஞனுக்கு போதுமானதாக இருந்தது.. "உங்களை போன்ற அழகான பெண்ணை தனிமையில் தவித்துவிட அவருக்கு எப்படி மனசு வருகிறது.. இப்படி ஒரு பெண் கிடைத்தால், நானெல்லாம் வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்து கொண்டேயிருப்பேன் என்று அந்த பெண்ணை தன் வலையில் விரிக்க ஆரம்பித்தார் இளைஞர்.. இறுதியில், எமோஷனலாக பேசிப்பேசியே, தன் மீதான நம்பிக்கையையும் அந்த பெண்ணிடம் வளர்த்துவிட்டார்.

    ஃபிளைட்

    ஃபிளைட்

    நாம் இருவரும் நேரில் சந்திக்கலாமா? என்று ரேவதி கேட்க, இதற்காகவே காத்திருந்த அந்த இளைஞனும், சம்மதம் சொல்கிறான்.. அடுத்த வாரம் கோவாவில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.. தன்னுடைய பள்ளி தோழிகள் கோவாவில் கெட் டூ கெதர் நடத்துவதால், தானும் போக வேண்டும் என்று தன்னுடைய கணவரிடம் பொய் சொல்லி அனுமதியையும் பெற்றுக் கொண்டார் ரேவதி... தனியாகவே, பிளைட்டை பிடித்து, குறிப்பிட்ட நாளில் கோவாவில் வந்து இறங்குகிறார் ரேவதி.

     ப்ளூ கலர் ஷர்ட்

    ப்ளூ கலர் ஷர்ட்

    மாலை 6 மணிக்கு அங்குள்ள ஹோட்டல் ஒன்றில், அந்த இளைஞனும், ரேவதியும் சந்திக்க முடிவாகி இருந்தது.. அந்த ஹோட்டல் முன்பு, நீலநிற சட்டையுடன் கருப்பு பேண்ட் அணிந்திருப்பதாகவும், கையில் பூங்கொத்துடன் காத்து கொண்டு நிற்பேன் என்றும் இளைஞன் ரேவதியிடம் தன் அடையாளத்தை சொன்னான்... மிகுந்த ஆவலுடன் அந்த இளைஞன் முகத்தை பார்க்க, அந்த ஹோட்டலுக்கு, சரியான நேரத்தில் சென்றார் ரேவதி.. அங்கு நீலநிற சட்டை + கருப்பு பேண்ட் + பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தார் ரேவதியின் டாக்டர் கணவர்.. அவரை அங்கு பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டார் ரேவதி.

     வேவு பார்த்த கணவன்

    வேவு பார்த்த கணவன்

    இத்தனை நாளும், இளைஞன் போல பேசிக் கொண்டிருந்தது, தன் கணவன்தான் என்பதை அறிந்து, அங்கேயே பிரச்சனை வெடித்தது.. இருவருக்குள்ளும் தகராறு முற்றி, கடைசியில் போலீசுக்கு வந்துள்ளது.. இந்த பிரச்சனையைதான், அதிகாரி ரவி டீல் செய்துள்ளார். தம்பதிக்கு கவுன்சிலிங் தந்து அனுப்பி வைத்துள்ளார்.. தன்னுடைய மனைவியையே கணவன் வேவு பார்க்க நேர்ந்ததும், மனைவி கணவனை ஏமாற்ற பார்த்த சம்பவம் ஒருபக்கமும் நடந்தாலும், சோஷியல் மீடியாவில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரவி..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+