"கருப்பு ஆடு".. சீனியரை சிக்க வைத்த அந்த "புள்ளி" யார்?.. கொங்கு Vs தென்மண்டல அதிமுகவில் பரபரப்பு
வைத்திலிங்கத்துக்கு எதிராக காய் நகர்த்தும் நபர் யார் என்று தெரியவில்லை
சென்னை: அதிமுகவில் ஒரு முக்கியமான விஷயம் புகைந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே உட்கட்சி விவகாரம் தலைதூக்கி வரும் நிலையில், இந்த சம்பவமும் அத்துடன் சேர்ந்து கொண்டு பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.
முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் மீது ஊழல் புகார் எழுந்தது.
தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கட்டிட அனுமதி வழங்குவதற்காக ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் இந்த ஊழல் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தி இருந்தது.

வைத்திலிங்கம்
ஆனால், அறப்போர் இயக்கம் என்ன சொன்னாலும் அது தவறு... புகார் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு குற்றச்சாட்டுகளுக்கு பிறகு பதிலளிப்பேன் என்று வைத்திலிங்கமும் உறுதிபட தெரிவித்திருந்தார் என்றாலும், இந்த ஊழல் புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தன்னுடைய கோரிக்கையில் உறுதிபட தெரிவித்துள்ளது...

வைத்திலிங்கம்
இதையடுத்து, அந்த வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. எந்தவித அறிகுறியுமின்றி, வைத்திலிங்கம் மீது இப்படி ஒரு புகார் திடீரென எழுவதற்கு என்ன காரணம்? யார் காரணம் என்ற சந்தேகம் சொந்த கட்சிக்குள்ளேயே வலுத்து வருகிறதாம்..

டெல்டா புள்ளி
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.. ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்... சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்..

டாப் 5 நிர்வாகிகள்
ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. அதாவது ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்திலிங்கம்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்.. ஆனால், 2016 தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார்.

டெல்டா
ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்ன என்ற வருத்தம் டெல்டா அதிமுகவில் எழுந்தது.. ஆனால், ஓபிஎஸ் அவரை கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. எடப்பாடி ஆட்சியில் எப்படியும் எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்..

எடப்பாடி பழனிசாமி
மேலும் தென் மண்டலத்தைவிட, கொங்கு மண்டலத்தை எடப்பாடி தூக்கி வளர்த்தது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.. எனவே, வைத்திலிங்கம் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், திடீர் ஊழல் புகார் என்ற விவகாரம் வெடித்துள்ளது.. இதற்கு காரணம் கொங்குவில் உள்ள சில அதிமுக தலைகள்தான் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன..

ஆதிக்கம்
சமீபத்தில் தஞ்சை மண்டலத்தில் உட்கட்சி தேர்தலில் வைத்திலிங்கம் அபார வெற்றி பெற்றிருந்தார்.. வைத்திலிங்கம் வெற்றி பெற்றது சசிகலாவே வெற்றி பெற்றது போல என்ற தென்மண்டலங்களில் கருதப்பட்டது.. அதேபோல, அதிருப்தி காரணமாக, எந்நேரமும் இவர் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்றும் செய்திகள் பரபரத்து வந்தன.. அதனாலேயே இப்படி ஒரு ஊழல் புகார் எழுந்திருக்கலாம் என்கிறார்கள்.

கருப்பு ஆடு
மற்றொருபுறம் கொங்குவிலும் வைத்திலிங்கம் ஆதிக்கம் செலுத்த முனைய முற்பட்டதாகவும், இது அங்குள்ள ஒரு மாஜிக்கு கடுப்பை தந்ததாகவும், எக்காரணம் கொண்டும் கொங்குவில் யாரும் என்ட்ரி தந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இப்படி ஒரு புகாரில் சிக்க வைத்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.. இதில் எது உண்மை என்று தெரியாவிட்டாலும், அதிமுக எந்தவிதமான பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து வருகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications