"கோட்டையில் ஓட்டை".. பின்னாலயே வர்றாங்களாம்.. அடுத்து "இவராமே"? கதிகலங்கும் கட்சி.. சென்னையில் புயல்
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் பரபரத்து வரும்நிலையில், அடுத்த குறி யாருக்கு என்ற யூகங்கள் இணையத்தில் வலம்வர துவங்கி உள்ளன.. இதனால் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் சேர்ந்தே கதிகலங்கி கிடக்கிறதாம்.
ஆளுங்கட்சி இருக்கும் சூழலிலேயே அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்.. அதுவும் மிக மிக முக்கியமான அமைச்சர்.. அதுவும், முதல்வரின் நேரடி நன்மதிப்பை பெற்ற அமைச்சர் கைது செய்யப்படுவது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் என்னவோ அதிமுக ஆட்சியில் நடந்ததாக இருந்தாலும், விசாரணை சம்பவம் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பது அதைவிட விசித்திரமாக இருந்து வருகிறது. திடுதிப்பென்று தலைமை செயலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியது, அதைவிட ஆச்சரியத்தை தந்து வருகிறது.

முக்கிய குறி: திமுக ஆட்சி அமைந்ததுமே, மேலிடத்தால் "கட்டம்" கட்டப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி மீது தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.. மற்றொருபக்கம், சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்தபடியே வந்தார்.. இதற்கு நடுவில் திமுகவுக்குள்ளேயும், சில பொருமல்கள் செந்தில் பாலாஜி மீது எழத்தான் செய்தது.. மொத்தத்தையும் நாலாபக்கமும் சமாளித்து மேலேழுந்தவந்தநிலையில்தான், "முகாந்திரம் இருந்தால் முதலில் இருந்து வழக்கை விசாரிக்கலாம்" என்று சுப்ரீம்கோர்ட் செக் வைத்தது.
கிணற்றில் போட்ட கல்: செந்தில்பாலாஜிக்கு இங்கிருந்துதான் பிடி இறுக தொடங்கியது.. ரெய்டுகள் ஆரம்பமாகின.. கையில் கிடைத்த ஆதாரங்களை வைத்து கொண்டு, அடுத்தடுத்த அதிரடியில் இறங்கினர்.. வழக்கமாக தலைவர்கள் தரப்பில் ரெய்டுகள் நடந்தாலும், அதற்குபின் அந்த ரெய்டு விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாய் அமுங்கிவிடும்.. அப்படித்தான், அதிமுக மாஜி ரெய்டுகள் விவகாரத்திலும் நடந்தது.. ஆனால், செந்தில்பாலாஜி விவகாரத்தில், அப்படியில்லை..
இத்தனை நாட்களும், செந்தில் பாலாஜியை சுற்றி நடந்து கொண்டிருந்த ரெய்டு, இப்போது நேரடியாகவே பாய்ந்தது.. நேரடியாகவே குறி வைக்கப்பட்டார்.. தலைமை செயலகத்தில் அமைச்சரின் அறைக்குள்ளேயே புகுந்து மத்திய விசாரணை அமைப்பின் ஆய்வு தொடர்ந்தது, டெல்லிவரை எதிரொலித்தது.. ஆனால், நள்ளிரவில் கைது என்றதை திமுக தரப்பு எதிர்பார்க்கவேயில்லையாம்.
அமலாக்கத்துறை: அமலாக்கத்துறைக்கு அழைத்து சென்று விசாரிப்பதுதான், உச்சக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று நினைத்தனர்.. ஆனால், இந்த கைது நடவடிக்கையை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.. அதுமட்டுமல்ல, கைது நடவடிக்கையில் முறையான நடவடிக்கையை பின்பற்றவில்லை, மனிதஉரிமை மீறல் என்று மட்டுமே திமுக தரப்பும் கொந்தளிக்கிறதே தவிர, வழக்கு, விசாரணை, ஊழல் புகார்களுக்குள் செல்லவில்லை.
"நெஞ்சுவலி வந்தவர்களால் எட்டி உதைக்க முடியுமா?" என்று ஜெயக்குமார் கேட்கிறார் என்றாலும், எந்த குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது என்பதை மட்டும் கவனமாக தவிர்த்து விட்டார்.. அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் என்பதால், இதை பற்றி அதிமுகவினராலேயே அதிகம் பேசப்படாத சூழ்நிலை உள்ளது..
அடுத்த குறி: ஆக, இந்த கைது நடவடிக்கையால், இரு தரப்புமே கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே, அதிமுக பைல்ஸ் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. அந்தவகையில், அடுத்த குறி யார் என்பது குறித்த அலசல்களும் இணையத்தில் வட்டமடிக்கின்றன. இது தொடர்பான சில யூகங்களும் கிளம்பி உள்ளன.
எதற்கும் அசையாத அமைச்சர் செந்தில் பாலாஜியையே, அமலாக்கத்துறை கைது செய்துவிட்டதே என்பதால், திமுக அமைச்சர்களில் சிலருக்கு கிலி சூழ்ந்துள்ளதாம்.. ஏற்கனவே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மொத்தம் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.. அந்த 5 அமைச்சர்கள் யார் என்ற லிஸ்ட்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது..
டாப் 2 : இப்போது, இந்த நபர்களில் டாப் 2 அமைச்சர்கள் பெயர்கள் சலசலக்கப்படுகின்றன.. இவர்களில் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. இன்னொருவர், பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருபவராம்.. இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும்நிலையில், கூடிய சீக்கிரம் இவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெயிடு பாயலாம் என்கிறார்கள்.. இதற்கு நடுவில் அதிமுக தரப்பிலும் கதிகலங்கி கொண்டிருக்கிறதாம்.. யாரிடம் அடுத்த குறி பாயும் என்று தெரியவில்லை..!!
இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. "எவ்வித தகவலும் அளிக்காது, சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதாக" அந்த மனுவில் தெரிவித்ததோடு, நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவை இன்று நண்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில், திமுகவில் சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications