மளிகை கடைக்காரரையும்.. விட்டுவைக்காத கில்லாடி "ராணிகள்".. விழிக்கும் சென்னை.. டிட்டோ கோவை மதுமிதா
சென்னை: ஆன்லைனில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதால் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்கும்படி, நம்முடைய போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும்கூட, ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
3 நாளைக்கு முன்புதான் கோவையை அடுத்த பன்னிமடையை சேர்ந்த மதுமிதா என்ற பெண் போலீசில் கைதானார்.. மதுமிதாவுக்கு 32 வயதாகிறது.. இவர் தன்னுடன் படித்தவர்களிடமும், தனக்கு அறிமுகமானவர்களிடமும், போனை போட்டு, பிசினஸ் துவங்க போவதாக சொல்லி உள்ளார்..

பிசினஸ்: என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிக்க உள்ளதாகவும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அதாவது, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் தருவதாகவும், முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் ஒரு வருடத்தில் திரும்ப தந்து விடுவதாகவும் ஆசைவார்த்தை சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை போனஸ் தருவதாகவும் சொல்லி உள்ளார்.
முதலீடு: உடனே இவரை நம்பி, ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.. மொத்தம் ரூ.2 கோடிக்கு மேல் முதலீடு சேர்ந்துவிட்டது. அதோடு சரி... மதுமிதா எஸ்கேப்.
அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டிலும் அவர் இல்லை... சொந்த ஊரிலும் இல்லை, வெளியூர்களிலும் இல்லை.. இறுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தடாகம் போலீசுக்கு போனார்கள்.. மதுமிதா துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கேயும் ஆன்லைன் மூலமாக லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளார். பிறகு அங்கிருந்து கேரளா சென்றார்.. கேரளாவிலும் லட்சக்கணக்கில் மோசடி செய்தார். இறுதியில் ஒருவழியாக 3 நாளைக்கு முன்புதான் மதுமிதா சிக்கினார்.
கீழ்ப்பாக்கம்: இதோ சென்னையிலும் இதேபோன்ற மோசடி நடந்துள்ளது.. கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயலித்.. இவருக்கு 39 வயதாகிறது.. செம்பரம்பாக்கத்தில் மளிகை கடை ஒன்றை சொந்தமாகவே வைத்து நடத்தி வருகிறார்... சார்லஸ் என்பவர் இடத்தில்தான் ஜெயலித் மளிகை கடை வைத்திருக்கிறார்.
இந்த உரிமையாளர் சார்லஸ் மூலமாக 2 பெண்கள் ஜெயலித்துக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.. அமலி டார்த்தி (60), சசிரேகா (36) என்ற 2 பெண்களுமே சென்னை மாதவரத்தை சேர்ந்தவர்கள்.. நாளடைவில் ஜெயலித்துக்கு, இந்த பெண்கள் நெருங்கிய நட்பாகிவிட்டனர்.
ஆன்லைன்: இப்படிப்பட்ட சூழலில், ஆன்லைன் மூலம் பிசினஸ் செய்ய போவதாக, அமலி டார்த்தி, சசிரேகா இருவருமே கடந்த வருடம் சொல்லியிருக்கிறார்கள்.. அத்துடன், ஜெயலித்தையும், பிசினஸில் இணைய சொன்னதாக தெரிகிறது. இதற்கு ஓகே சொன்ன ஜெயலித், ரூ14 லட்சம் ரூபாயை 2 பெண்களிடமும் தந்துள்ளார்.. ஆனால், ஒருவருடம் ஆகியும், அந்த பெண்கள் எந்த பிசினஸையும் ஆன்லைனில் தொடங்கவில்லையாம்..
இதனால் சந்தேகமடைந்த ஜெயலித், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்... அந்த பணத்தையும் அவர்கள் தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள்.. இதற்கு பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று உணர்ந்த ஜெயலித், மாதவரம் போலீசுக்கு ஓடினார்.. சம்பந்தப்பட்ட 2 பெண்கள் மீது புகார் செய்தார்.
போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அமலி டார்த்தி, சசிரேகா ஆகிய 2 பெண்களையும் கைது செய்துள்ளார்கள்... ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்??
இதனால் சந்தேகமடைந்த ஜெயலித், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்... அந்த பணத்தையும் அவர்கள் தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள்.. இதற்கு பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று உணர்ந்த ஜெயலித், மாதவரம் போலீசுக்கு ஓடினார்.. சம்பந்தப்பட்ட 2 பெண்களின்மீதும் புகார் செய்தார்.
போலீசாரும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அமலி டார்த்தி, சசிரேகா ஆகிய 2 பெண்களையும் கைது செய்துள்ளார்கள்... ஆன்லைன் பிசினஸ், வங்கி தொடர்பான விவகாரங்களில் கவனமாக இருக்குமாறு போலீசாரும் பொதுமக்களை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. ஆனாலும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்??












Click it and Unblock the Notifications