சோலார் பேனல் வீட்டில் அமைக்கும் போது.. 300 யூனிட் இலவச மின்சாரம் எதற்கு? உண்மை தெரியுமா?
சென்னை: வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்கிற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற மத்திய அரசு அறிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலை பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூரிய ஒளி (சோலார்) மின்சார தகடுகளை அமைக்கும் ஒரு கோடி வீடுகளுக்கு, மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது, "சூரிய மின் திட்டம் மூலம் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடு (சோலார் பேனல்) அமைக்கும் நாட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தால் சோலார் மின்சார பயன்பாடு மற்றும் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரு.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் உதவும்.
மேலும் உற்பத்தி, நிறுவல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் இந்த சோலார் திட்டம் வழங்கும்" என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்நிலையில் வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்கிற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற மத்திய அரசு அறிவிப்பது ஏன் என்று சிலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நாமளே உற்பத்தி பண்றோமே அப்புறம் எதற்கு அவங்க தரனும். நாம அவ்வளவு உற்பத்தி பண்ண முடியாதா? இல்ல பத்தாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் இது உள்ள உண்மை என்ன, சோலார் தகடுகள் எப்படி அமைப்பது இதில் உள்ள சிக்கல் என்ன என்பதை பார்ப்போம்.
பொதுவாக நீங்கள் உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்கலாம். வீடுகளில் ஒரு கேவி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து குறைந்தது 72 ஆயிரம் செலவு ஆகும். அதிகபட்சம் லட்சங்களில் செலவு ஆகும். அது உங்கள் தேவையை பொறுத்து மின்சாரத்திற்காக அமைக்கலாம். உங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் , உங்கள் மின்சார தேவை நிச்சயம் பூர்த்தி ஆகிவிடும். அதேநேரம் மழை காலம், பனி காலங்களில் சிறிய அளவில் மற்ற மின்சாரம் தேவைப்படலாம்.. அதுவும் பேட்டரி வைத்து சேமித்து இருந்தால் தேவை மிகக்குறைவாக இருக்கும்..

சரி இதில் என்ன 300 யுனிட் இலவசம் என்கிறீர்களா.. இதுபற்றி மின்சாரம் மற்றும் சோலார் சார்ந்த தொழில் நுட்ப நிபுணர் பாலு வெளியிட்டிருந்த பதிவில், "1 கோடி பேருக்கு சோலார் கூரை அமைத்து கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு கூறியிருந்தார். அதைத் தான் பட்ஜெட்டில் சொல்லியிருக்காங்க.. அந்த ஒரு கோடி பேருக்கு மாச மாசம் 300 யூனிட் மின்சாரம் சோலார் பேனல் வழியாக இலவசமாக கிடைக்கும் என்றும், அதைய கிரிட்க்கு அனுப்பும் போது நம்ம உபயோகம் போக கிடைக்கிற உபரி மின்சாரத்தை விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்கள்" இவ்வாறு கூறினார்.
300 யூனிட் மின்சாரத்திற்கு எத்தனை சோலார் பேனல்கள் தேவை: அதேநேரம் வீடுகளில் ஒரு கேவி சோலார் சிஸ்டம் 3 முதல் 4 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும், 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெற வேண்டும் என்றால், 3கேவி சூரிய ஒளி (சோலார்) மின்சார தகடுகளை மொட்டை மாடிகளில் அமைக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓரளவு பெரிய வீடுகளுக்கு 500 யூனிட் மின்சாரம் பெற வேண்டும் என்றால், 5 கேவி மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் தகடுகளை அமைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
ஒரு வீட்டிற்கு 1 கிலோவாட் போதுமா? என்றால், 1kW சோலார் சிஸ்டம் 2-3 BHK வீட்டிற்கு எளிதில் மின்சாரம் தருமாம், அதில் நீங்கள் ஒரு குளிர்சாதன பெட்டி, மூன்று மின்விசிறிகள், ஒரு டிவி, ஒரு மடிக்கணினி மற்றும் 4-5 விளக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். சராசரியாக, நீங்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் சுமார் 800 W சுமைகளை ஒரு கேவி மின்சாரத்தில் இயக்கலாம் என்கிறார்கள்.. ஒரு கேவி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் அமைக்க குறைந்தது 72000 ரூபாய் தேவைப்படும். பெரிய அளவில் என்றால் 1200000 வரை கூட செலவு ஆகும்.
மத்திய அரசு : அதேநேரம் மத்திய அரசு ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறியுள்ளது அதற்கு ஆகும் செலவுகளை அரசு எந்த அளவிற்கு ஏற்கும். மானியம் எவ்வளவு, யாருக்கு எப்படி சோலார் அமைத்து தரப்போகிறது என்பது குறித்து தெளிவான அரசாணை வெளியிட்ட பின்னரே முடிவுக்கு வர முடியும். பட்ஜெட்டில் வந்திருப்பது அறிவிப்பு மட்டுமே, அரசாணையில் தான் தெளிவான வழிகாட்டுதல்களுடன் வெளியாகும். அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications