யாருங்க நேரமெல்லாம் குறிச்சு கொடுப்பது.. அதிமுக செய்த மிகப்பெரிய சொதப்பல்.. சில்லு சில்லாகிடுச்சே
சென்னை: அதிமுக சார்பாக நேற்று நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டம் கட்சிக்கு உள்ளே உள்ளவர்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அது ஏற்கப்படவில்லை. சென்னை மக்கள் இடையே இது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது குறித்து ஏற்கப்படவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி சொத்து வரி உயர்த்தப்பட்டது. சென்னையில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட அப்போதே இந்த வரி உயர்வு கடுமையான விவாதங்களை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக போராட்டம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுக்க மாவட்ட தலைநகர்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக சார்பாக நேற்று நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டம் கட்சிக்கு உள்ளே உள்ளவர்கள் இடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்று அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியிருக்கிறது. ஆனால் நேற்றுதான் ஹரியானா - ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெளியானதால் எந்த ஊடகத்திலும் அதிமுக போராட்டம் கவனம் பெறவில்லை. அதிமுக போராட்டம் பொதுவாக அது நேரலையில் கூட ஒளிபரப்பாகவில்லை.
ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வென்றது. பாஜக 48 இடங்களில் வென்றது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் அதன்பின் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக அதன்பின் முன்னிலையை சந்தித்து இறுதியில் உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வந்ததால் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டது.
மாறி மாறி வந்த முடிவுகளால் மக்கள் பலரும் அதையே கவனித்தபடி இருந்தனர். இதனால் அதிமுக போராட்டம் கவனம் பெறவில்லை. அதிமுக போராட்டம் பொதுவாக அது நேரலையில் கூட ஒளிபரப்பாகவில்லை. தேர்தல் முடிவுகள் போன்ற முக்கியமான செய்தி நாளில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது தவறான விஷயம். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்த ஐடியா கொடுத்தது யார் இதற்காக நேரம் குறித்து கொடுத்தது யார் என்ற விவாதம், கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளது.
ஒரு பிரதான எதிர்க்கட்சி இந்த விவகாரத்தில் எப்படி சொதப்பியது.. ஏன் சரியாக நேரம் குறிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications