இருந்தா இருங்க, இல்லாட்டி போங்க.. காயத்ரியை அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தது ஏன்? "அந்த" விஷயம்தான் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம். அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. என்ன நடந்தது?

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் , காயத்ரிக்கும் இடையிலான மோதல் என்பது இப்போது தொடங்கியது இல்லை. அது நீண்ட காலமாகவே இருக்கிறது. கடந்த மே மாதமே இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்தது.

கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது திடீரென கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பல புதிய நிர்வாகிகளுக்கு அப்போது பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும் காயத்ரிக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நான் கட்சிக்கு இது செய்தேன், அது செய்தேன் என்றெல்லாம் காயத்ரி ட்விட்டரில் புலம்பிக்கொண்டு இருந்தார். தினமும் அதை பற்றி வருத்தத்துடன் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்ணாமலை சீனியர் லீடர்களை விரும்பவில்லை. தனக்கு கீழ் ஒரு அணியை கொண்டு வர பார்க்கிறார் என்று செய்திகள் வந்தன. இதையடுத்து பாஜகவில் பதவி பெற வேறு வகைகளில் காயத்ரி தீவிரமாக காய் நகர்த்தி வந்தார்.

பாஜக

பாஜக

இதையடுத்து வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அண்ணாமலைக்கு காயத்ரி நன்றி தெரிவித்தார். அதன்பின் அமைதியாக இருந்த காயத்ரி கடந்த 3 நாட்களாக மீண்டும் தீவிரமாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த முறை, காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மோதல் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பாஜக தலைகள் சென்ற நிலையில், இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை.

மோதல்

மோதல்

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை அனுமதிக்காததுதான் காயத்ரி ரகுராம் கோபம் கொள்ள காரணம். இதன் காரணமாக கோபத்தின் உச்சிக்கு சென்றவர், என்னை மதிக்கவில்லை. கட்சியில் ஒரே நபர் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார். கட்சியில் சீனியர்களுக்கு இடம் இல்லை என்றெல்லாம் விமர்சனம் வைத்தார். அப்போதுதான் பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்தது. அதில், அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லனா மானாடமயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார். இதை பார்த்தது, தனக்கு எதிராக காசு கொடுத்து டிரெண்ட் செய்கிறார்கள் என்று காயத்ரி விமர்சனம் வைத்தார். அதோடு செல்வகுமாரை கடுமையாக விமர்சனமும் செய்தார். அப்போதுதான் காயத்ரி முக்கியமான விஷயம் ஒன்றை தெரிவித்தார். அதன்படி, அதில், செல்வகுமார் ஆட்கள் எனக்கு எதிராக போஸ்ட் செய்து வருகின்றனர். நீங்கள் என்னை ட்ரோல் செய்வதர்கள் காசு பெறவில்லை. போய் "அந்த" ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் போல 4000+ லைக்குகளை போடுங்கள் என்று கூறியுள்ளார். அதாவது, எனக்கு எதிராக போஸ்ட் போடுவதற்கு உங்களுக்கு காசு கொடுக்கப்படவில்லை.

அண்ணாமலை

அண்ணாமலை

எப்போது ஒரு வாலில் (ஒருவருடைய ட்விட்டர் பக்கத்தில்) போய் 4000 சொச்சம் லைக்ஸ் போடுவீர்களே.. அங்கே போய் லைக்ஸ் போடும் வேலையை பாருங்கள் என்று கூறி உள்ளார். இதைத்தான் காசு வாங்கிக்கொண்டு எப்போதும் போல அண்ணாமலைக்கு லைக் போடுங்கள் என்று இவர் மறைமுகமாக விமர்சனம் செய்ததாக நெட்டிசன்கள் இதை பற்றி விளக்கி உள்ளனர். இதில் அண்ணாமலை பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் அண்ணாமலையைத்தான் சொல்கிறார் என்று நினைத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

காசு கொடுத்து லைக்

காசு கொடுத்து லைக்

இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட செய்தி குறிப்பில் . தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு நீக்கப்படுகிறார். மாத காலத்திற்கு
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+