மடிப்பாக்கத்தில்.. "அந்த" பொண்ணு யாரு? காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. அட கடவுளே.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த காருக்குள் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த பகீரை கண்டுபிடித்துள்ளனர்.

அப்படித்தான், இப்போதும் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், மடிப்பாக்கம் சாஸ்திரி நகர், பஜார் மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திடீர் ரெய்டு: அப்போது, ரோட்டோரம் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.. அந்த கார் அருகில் சென்று பார்த்தபோது, நபர் உட்பட, இளம் பெண்ணும் இருந்தார்..

Why did Chennai police arrest karnataka man and brothel raid in madipakkam shastri nagar

பின்னர், அந்த நபரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.. ஆனால், அந்த நபர், முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்.. இதனால், பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், காருக்குள் விபச்சாரம் செய்ய தன்னை அழைத்து வந்திருப்பதாக அந்த பெண் போலீசில் கூறி அழுதார்.. தன்னை பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் அந்த பெண் சொன்னார்.

விசாரணை: எனவே, போலீசார், காரில் இருந்த நபரை பிடித்து, தங்கள் பாணி விசாரணையை நடத்தினர்.. உடனே அந்த நபர் மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.. அந்த நபரின் பெயர் சோமன்.. இன்னொரு பெயர் ஷேக் சோமன்.. மற்றொரு பெயர் சால்மன்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவராம்.. 42 வயதாகிறது.. பிரபலமான பாலியல் புரோக்கர் என்பதும் தெரியவந்தது.. மாடலிங் பெண்கள், மற்றும் வேலை தேடும் இளம்பெண்கள் போன்றோரை குறி வைத்து, வேட்டையாடி வருபவர்.. அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அழைத்து வந்து சென்னையில் பாலியல் புரோக்கர்களுக்கு விற்றுவிடுவாராம்..

லட்சக்கணக்கில் பணம்: குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பெண்களை விற்பனை செய்து வந்துள்ளார்.. இதுபோல, சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விற்று காசு பார்த்துள்ளார்.

இவரிடம் விசாரிக்கும்போதுதான், இவர் மீது ஏற்கனவே பல கேஸ்கள் நிலுவையில் உள்ளது போலீசாருக்கே தெரியவந்தது. இறுதியில், பிரபல பாலியல் புரோக்கர் சோமன் (எ) ஷேக் சோமன் (எ) சால்மனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.. இறுதியில், காருக்குள் இருந்த மாடலிங் பெண்ணும் மீட்கப்பட்டார்...

சொகுசு கார்: இந்த பாலியல் தொழில் செய்வதற்காகவே சொகுசு கார் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறாராம் சோமன்.. இதைத்தவிர 10 செல்போன்கள் வைத்திருக்கிறார்.. 2 ஸ்வைபிங் மெஷின் மற்றும் 37 ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இவை அனைத்தையுமே போலீசார் பறிமுதல் செய்தனர்.. சால்மன் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. மாடலிங் பெண், அரசு மகளிர் காப்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சோமன் மீது சென்னையிலேயே கேஸ் புக் ஆகி இருக்கிறதாம்.. ஆனால், அவர் அடிக்கடி பெங்களூருவுக்கு பறந்துவிடுவதால், போலீசில் சிக்காமல் இருந்திருக்கிறார்.. அன்றைய தினம், ரோட்டோரம் கார் நீண்ட நேரமாகவே நின்று கொண்டிருந்ததாம்.. அந்த பகுதியில் விசாரித்தபோதுகூட, கார் நீண்ட நேரம் நிற்பதாக சொன்னார்கள். அதற்கு பிறகுதான் காருக்குள் சென்று பார்த்தபோது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணும்,காருக்கு அருகே ஆண் ஒருவரும் நின்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள்..

Why did Chennai police arrest karnataka man and brothel raid in madipakkam shastri nagar

விசாரணை: தனித்தனியாக விசாரணை நடத்தியபோதுதான் உண்மை வெளிப்பட்டுள்ளது. சொகுசு காரையே, படுக்கை அறையாக மாற்றம் செய்து, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளாராம் இந்த சோமன்.. தற்போது மீட்கப்பட்ட பெண்ணையும், 2 லட்சத்துக்கு விலை பேசி விற்றுள்ளார்.. இப்போது சோமனிடம் தீவிரமான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில்தான் எத்தனை இளம்பெண்களை நாசம் செய்தார் என்பது தெரியவரும்..!

சமீபகாலமாகவே, சென்னையில் பாலியல் தொழில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பாலியல் தொழில் தடுக்க பிரிவு காவல்துறையினருக்குச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரிலேயே இத்தகைய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.. சோமன் மிகப்பெரிய தரகர் என்பதால், இவரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது.. அதேபோல, இவருக்கு பின்னணியில் மிகப்பெரிய நெட்ஒர்க் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நீள்கிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+