அடையாறு ஆற்றில் கருப்பா "அசையாமல்" இருந்தது.. அப்பறம் உற்றுப்பார்த்தால்.. ஆளுநருக்கு ஈவிகேஎஸ் கெடு
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆளுநர் ரவியை கண்டித்து பேசி சரமாரி விமர்சித்தார்
சென்னை: இன்னும் ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும் என்று ஆளுநர் ரவிக்கு, ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
2 நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை 28-ம் தேதி நடத்த போவதாக கூறியிருந்தார்.
தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை அழகிரி நடத்த போவதாக அறிவித்தார்.

இளங்கோவன்
அதன்படி, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது.. இதில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.. அனைவருமே ஆளுநருக்கு எதிராக பேசி, எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதன் முழு பேச்சுதான் இது:

மிஸ்டர் ரவி
"இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைப்பே உதைக்கிறது.. தமிழக ஆளுநரை கண்டித்து என்று இருக்கிறது.. யார் இந்த ஆளு ரவி? நம்மை ஆளுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? தயவுசெய்து அவரை யாரும் இனி கவர்னர் என்றோ, வேறு ஏதாவது சொல்லியோ கூப்பிடாதீங்க.. இனிமேல் ரவி அவர்களே, திரும்பி போங்க என்று சொல்லலாம்.. அதுகூட அவர்களே என்பதை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம், அல்லது சொல்ல தேவையில்லை.

பாம்பு கறி - நாய் கறி
ரவி இதற்கு முன்பு வேலை பார்த்த நாகலாந்தில், பாம்பு கறி, நாய் கறி சாப்பிடுவார்கள்... ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நெல் அரிசி, சோறு சாப்பிடுபவர்கள். கொஞ்சம் உரசினாலும் தீ பற்றிக்கொள்ளும் என்பதை இந்த ரவி மறந்துவிடக்கூடாது.. என்ன ஆணவம்? என்ன திமிர்? இப்போது கூட செல்வப்பெருந்தகையிடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பற்றி சொல்லும்போது, கோமளவல்லி என்றே குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என்றேன்...

சில்லறைத்தனம்
அப்படி கோமளவள்ளி என்று சொல்லியிருந்தால், யாரும் ஒன்றும் கேட்டிருக்க மாட்டார்கள்.. எல்லாரும் சேர்ந்து நீட் தீர்மானம் கொண்டுவந்தால், ஒருபொறுப்புள்ள ஆளுநர் இப்படி சில்லறைத்தனமாக நடந்து கொண்டால் என்ன அர்த்தம்? நம் முதல்வர் ஸ்டாலின், நேரில் சந்தித்து, நீட் குறித்து கோரிக்கையை வைத்து, நான் பிரதமரை சந்திக்கும்போதே வலியுறுத்துகிறேன், அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டும் அதை கிடப்பில் போட்டால் என்ன அர்த்தம்?

எருமை மாடுகள்
இப்போ வரும்போது நான் பார்த்தேன்.. அடையாறு ஆற்றில் கருப்பு கருப்பா அசையாமல் நின்று கொண்டிருந்தது.. அது என்னவென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது எருமை மாடுகள் என்று.. அப்படித்தான் ரவி, எருமை மாடு போல அசைவற்று கிடக்கிறார்.. எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை, மோடி சொல்வதையே கேட்டு கொண்டிருக்கிறார்கள்.. தமிழ்நாடு நாகரீகமானது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. தமிழர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள் என்று ரவி நினைக்கிறார்.

அநாகரீகம்
தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் பழைய தலைவர்களை கேட்டு பாருங்க.. தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்... தமிழர்களை பூச்சி புழு போல நினைத்துவிட வேண்டாம்.. எவ்வளவு சிரமம் எடுத்து ஸ்டாலின் உங்களை சந்தித்து கேட்டுக் கொண்டார்.. ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? உங்கள் பணி ஒரு போஸ்ட் மேன் தானே? இங்கு தருவதை இன்னொரு விலாசத்திற்கு கொண்டு செல்லும் தபால்காரன் வேலையை சரியாக செய்ய வேண்டியதுதானே?

அநாகரீகம்
தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் பழைய தலைவர்களை கேட்டு பாருங்க.. தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்... தமிழர்களை பூச்சி புழு போல நினைத்துவிட வேண்டாம்.. எவ்வளவு சிரமம் எடுத்து ஸ்டாலின் உங்களை சந்தித்து கேட்டுக் கொண்டார்.. ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? உங்கள் பணி ஒரு போஸ்ட் மேன் தானே? இங்கு தருவதை இன்னொரு விலாசத்திற்கு கொண்டு செல்லும் தபால்காரன் வேலையை சரியாக செய்ய வேண்டியதுதானே?

ஆளுநர் ரவி
தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார்... தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி.. இந்த ரவிக்கு வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரவியை ஒழிக்க நினைத்தால் அதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய முடியும்.. ஆனால் மாநிலத்தை மிகசிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்...

ஊட்டி
ரவி அவர்களே, குழந்தை குடும்பத்தோடு இருக்கீங்க.. ஊட்டியில் இருந்து வந்திருப்பீர்கள்.. இன்னும் ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும்... ரவி உங்களை ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம்.. டிரெயினில்தான் டெல்லி அனுப்புவோம்.. விமானத்தில் டிக்கெட் காஸ்ட்லி.. அது மாநில அரசு தலையில்தான் விழும்.. " என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications