இக்கட்டான நேரத்தில்! சென்னையில் இல்லாமல்.. ஈரோட்டுக்கு போன எடப்பாடி பழனிசாமி! ஏன் இப்படி? குழப்புதே
சென்னை: சென்னையில் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இல்லாமல்.. ஈரோட்டில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் உட்பட, மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அம்மாவின் அரசில் முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

அதிகாரிகள் இல்லை: சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் IAS அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக (Nodal Officers) நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் IAS அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத் துறை, மின்சார வாரியம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, மழைக் காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்தத் திட்டமிடுவார்கள்.
இப்பணிகள் எல்லாம் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும். மேலும், கால்வாய்களில் தேங்கியுள்ள மண் (சில்ட்) பருவ மழைக்கு முன்னதாகவே அப்புறப்படுத்தப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் புயல் பற்றிய தகவலை வழங்கியவுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண மையங்கள், உணவு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்புப் பணிகளில் ஈடுபட மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதனால், மீட்பு பணிகள் எங்கள் ஆட்சியில் சுணக்கமின்றி நடைபெற்றது.
மேலும் எங்கள் அரசு, மக்களுக்கு 5 நாட்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், போதுமான அளவு குடிநீர் மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை நிரப்பிக்கொள்வது போன்றவற்றையும் மற்றும் முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யும். ஆனால், இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கையினையும் மக்களிடம் செய்யத் தவறிவிட்டது.
இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது, என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனங்களை வைத்தார்:
கடுமையான விமர்சனம்: சென்னையில் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இல்லாமல்.. ஈரோட்டில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
ஈரோட்டில் நடந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் துரைசாமி கவுண்டரின் நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி சென்னை வெள்ளத்தின் போது 2 நாட்கள் மட்டுமே சென்னையில் இருந்தார்.
அதில் ஒருநாள் மட்டுமே அவர் மக்களை நேரடியாக சந்தித்தார். மற்றபடி களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் களத்தில் நிற்க வேண்டியது மிக அவசியம். அவர்கள் களத்தில் இறங்கி அரசுக்கு பிரஷர் போட வேண்டும். ஸ்டாலின் எதிர்க்கட்சி யில் இருந்த போது மழை காலங்களில் இப்படி செய்தது உண்டு.
ஆனால் எடப்பாடி சென்னையில் இல்லாமல் ஈரோட்டில் நடந்த துரைசாமி கவுண்டரின் நூற்றாண்டு விழாவில் இந்த நேரத்தில் போய் கலந்து கொண்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications