ஐயா.. "மன்னிச்சுடுங்க".. ஓபிஎஸ்சை கலங்க வைத்த ஜெயதேவி.. கண்ணீர்விட்ட மகளிர் அணி.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் இருந்து திரும்பி சென்னைக்கு வந்தார். சென்னை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நேற்று முதல்நாள் மிகப்பெரிய களேபரங்களுக்கு இடையில்தான் நடந்தது. பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவிற்கு பின் பாஜக தலைவர் அண்ணாமலை, சிடி ரவி ஆகியோரை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார்.
அன்று மாலையே அவர் டெல்லிக்கும் சென்றார். டெல்லியில் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு கூட்டங்களை நடத்தினார்.

டெல்லி
டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு இந்த சந்திப்பிற்கு நேரம் கிடைக்கவில்லை. . குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் திரௌபதி முர்மு பாஜக கூட்டணி சார்பாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன்பின் பல்வேறு பாஜக தலைகளை ஓபிஎஸ் சந்தித்தார். இவர்களுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

சந்தோஷம்
இந்த ஆலோசனைகளுக்கு பின் ஓபிஎஸ் மிகவும் சந்தோஷமாக சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. டெல்லியில் இவர் நினைத்த சில காரியங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை விமானம் ஏறி, நேற்று இரவு ஓபிஎஸ் சென்னை வந்தார். சென்னை வந்த ஓபிஎஸ்ஸுக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

எதிர்பார்க்கவில்லை
அவரே எதிர்பார்க்காத அளவிற்கு மிக பெரிய அளவில் நிர்வாகிகள் திரண்டு வந்து ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு பெரிய மாலை போடப்பட்டது. ஐயா வாங்க ஐயா.. ஓபிஎஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். 200க்கும் அதிகமான நிர்வாகிகள் அங்கு நின்று ஓபிஎஸ்ஸை வரவேற்றனர்.

மன்னிப்பு
அவர் காரில் ஏறியதும் அங்கே மகளிர் அணி நிர்வாகிகள் சென்று.. பேசினர்.. ஐயா எங்களை மன்னிச்சிடுங்க.. பொதுக்குழுவில் நடந்ததற்கு நாங்க மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறினர். இதை கேட்ட ஓபிஎஸ் இருக்கட்டும்மா என்றார். தொடர்ந்து பேசிய ஜெயதேவி என்ற மகளிர் அணி நிர்வாகி... நான் பொதுக்குழுவிற்கு கூப்பிட்டார்கள் என்று சென்றேன். மற்றபடி உங்களை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

பொதுக்குழு
பொதுக்குழுவில் கலந்து கொள்ள மட்டுமே சென்றேன். அங்கு இப்படி செய்வார்கள் என்று தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள் என்று ஜெயதேவி கூறினார். இதை கேட்ட ஓபிஎஸ் சரிம்மா விடுங்க.. விடுங்க.. என்று பதில் அளித்தார். அவரிடம் இன்னும் சில பெண் நிர்வாகிகள் மன்னிப்பு கேட்டனர். சிலர்தான் எடப்பாடி மூலம் உங்களை அவமானப்படுத்தினர்.. மற்றவர்கள் உங்களை அப்படி நடத்தவில்லை என்று கூறி பெண்கள் பலர் ஓபிஎஸ்ஸிடம் நேற்று மன்னிப்பு கேட்டனர்.












Click it and Unblock the Notifications