அமித் ஷா இருக்குறப்ப.. ஏன் தேரை இழுத்து தெருவில் விட்டீங்க? அண்ணாமலைக்கு டெல்லி டோஸ்? என்ன நடந்தது?
சென்னை: எல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்த போது நீங்க ஏன் தேரை இழுத்து தெருவில் விட்டீர்கள் என்று கோபமாக அண்ணாமலையிடம் டெல்லி பாஜக விமர்சனம் வைத்ததாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் நடந்து உள்ளன. இன்னும் சில பாஜக தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்தார்.

இந்த நிலையில்தான் டெல்லி பாஜக அண்ணாமலையிடம் சொன்னது என்ன? அங்கே பேசப்பட்டது என்ன என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுக பாஜக பிளவு சரியாக அமையவில்லை என்பதே இப்போது நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம். அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி பிரிவிற்கு காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால்.. அதன்பின்பும் கூட அமித் ஷாவை சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் . அதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சென்று நட்டாவை சந்தித்தனர். அதனால் அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் என்று கூற முடியும். ஏனென்றால் இதற்காக அவர்கள் கூட்டணியை முறிக்க வாய்ப்பு இல்லை.
அதிமுக பாஜக பிளவு சரியாக அமையவில்லை என்பதே இப்போது நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம். நேற்று கூட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் விருப்பமாக கூட்டணி முறிவிற்கு காரணம் என்கிறார். அமித் ஷா 20 தொகுதி கேட்டார், கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சேர்க்க சொன்னார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் கூறப்பட்டது. அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.

ஆனால் இதெல்லாம் உண்மையான காரணமா? அமித் ஷா - எடப்பாடி அன்று பேசியது என்ன? அவர்கள் இடையே மோதலுக்கு காரணம் என்ன? தொகுதி பங்கீடு காரணமா? என்னதான் இங்கே நடந்தது என்பது தெரியவில்லை. அல்லது சிறுபான்மையினரை கவர, அவர்களின் வாக்குகளை கவர எடப்பாடி இப்படி செய்கிறாரா? அப்படி பார்த்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடருகிறது என்று இன்னொரு பக்கம் துரைசாமி சொல்கிறார். இதை எல்லாம் பார்க்கும் போது குழப்பமாக உள்ளது .
தொண்டர்கள் விருப்பம்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் தொண்டர்கள் நீண்ட காலமாகவே கூட்டணி வேண்டாம் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க இப்போது தொண்டர்கள் பேச்சை கேட்க என்ன காரணம். இந்த நிலையில்தான் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. இப்போது அண்ணாமலை டெல்லி போய் இருக்கிறார். டேட்டா ஒன்றை கொடுத்துள்ளார். தனியாக நிற்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் தனியாக நிற்க முடியாது. கோவையை பாருங்கள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தோம்.
இதற்கு பிரிந்து நின்றதே காரணம். இதைத்தான் டெல்லி சொல்லி இருக்கிறது. ஒரு கார்ப்ரேஷனை கூட பிடிக்க முடியவில்லை. தோல்வி உறுதியானது. அது மீண்டும் நடக்க வேண்டுமா என்று கேள்வி கேட்டுள்ளனர். எல்லா நன்றாக போய் கொண்டு இருந்த போது நீங்க ஏன் தேரை இழுத்து தெருவில் விட்டீர்கள் என்று கோபமாக கேட்டுள்ளனர். கடுமையாக கேட்டுள்ளனர். சீட் பிரச்சனை, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அமித் ஷா பார்த்துக்கொள்வார்.
அவர் இருக்கும் போது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். மேலிடம் அதிமுகவை மதிக்கும் போது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். கட்சியை வளர்க்க வேண்டிய பணியை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள். கூட்டணியில் குழப்பம் செய்ய உங்களிடம் சொல்லவில்லை. இதனால்தான் டெல்லியில் டாப் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க முடியவில்லை. அண்ணாமலை மீது டெல்லிக்கு அதிருப்தி. இப்போது உங்களை தூக்க மாட்டோம். 5 மாநில தேர்தலுக்கு பின் பார்ப்போம் என்று கூறியுள்ளனர். மோடி , அமித் ஷா கையில்தான் அண்ணாமலை பற்றிய முடிவு இருக்க போகிறது, என்று டெல்லி தரப்பினர் கூறியுள்ளனர் என்று பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications