ஆளுநர் ரவியை ரஜினி சந்தித்த உடனே.. ஆளும் திமுக எடுத்த மூவ்.. நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்?
சென்னை: நேற்று நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்த சில நிமிடங்களில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆளுநருக்கு எதிரான முக்கியமான மூவாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
ஆளுநர் ஆர். என் ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் இருந்து கடந்த ஒன்றரை வருடமாக ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையிலான சந்திப்பு 20-30 நிமிடங்கள் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கு பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஆளுநர் ரவியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

என்ன பேசினார்கள்?
இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் நேற்று நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்த சில நிமிடங்களில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அறிவித்தார். திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆளுநருக்கு எதிரான முக்கியமான மூவாக பார்க்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.

மாநாடு
கடந்த மே மாதம் ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை. இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர்
அதாவது ஆளுநரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு முதல்வரை வேந்தராக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இதனால் நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில்தான் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் துணை வேந்தர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. மாநில அரசின் உரிமையை பயன்படுத்தி மாநாடு நடக்கிறது.

சட்டம்
சட்டப்படி இப்போதும் ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர். ஆனால் அவரை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் பதிலடியாக இது பார்க்கப்படுகிறது. சரியாக ரஜினியை ஆளுநர் சந்தித்த அதே நாளில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேந்தர் என்ற முறையில் இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ள கூடாது என்று ஆளுநர் ரவி உத்தரவிடுவாரா? அல்லது முதல்வரின் செயலில் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications