அச்சத்தில் இந்தியர்கள்.. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கூட.. அமெரிக்காவிலிருந்து இந்தியா வர பயம்.. ஏன்?
சென்னை: அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலர்.. இந்த வருட இறுதியில் வர உள்ள கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளின் விடுமுறைக்கு ஊர் திரும்பாமல் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியர்களின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப், தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்க்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார்.

டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.
இதை பிடன் - கமலா அரசு தடுக்க தவறிவிட்டதாக புகார்களை வைத்தார். அதிலும் இந்த விவகாரத்திற்கான border czar துறையை கமலா நேரடியாக கவனித்து வந்தார். அவர் எல்லையை பாதுகாக்க தவறிவிட்டார் என்று புகார்களை டிரம்ப் வைத்தார். இப்படிபட்ட நிலையில்தான் தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு இந்த விவகாரம் முக்கியமான காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான்.. டிரம்ப் வென்றதும் விரைவில் அங்கே முறைகேடாக குடியேறி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியுரிமை: அதோடு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
விடுமுறைக்கு ஊர் திரும்பாமல் இருப்பவர்கள்: அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலர்.. இந்த வருட இறுதியில் வர உள்ள கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளின் விடுமுறைக்கு ஊர் திரும்பாமல் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்பார். அவர் ஆட்சிக்கு வந்த முதல் வாரமே அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் மீது ஆக்சன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா திரும்பினால்.. மீண்டும் அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சம் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இடையே நிலவுகிறது.
இந்த அச்சம் காரணமாக டிரம்ப் பதவி ஏற்று விதிகளை மாற்றும் வரை அமெரிக்காவை விட்டே செல்ல வேண்டும். அமெரிக்காவிலேயே இருக்கலாம். இந்தியா வந்தால் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்வதில் சிக்கல் ஆகும் என்ற அச்சத்தில் அவர்கள் அமெரிக்காவிலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் பிளானிங்: ஏற்கனவே டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications