இறையன்பு ஐஏஎஸ் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம்.. புதிய தலைமை செயலாளர் யார்?
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பத்துள்ளார். இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெரும் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் துறை வாரியாக என்னென்ன பணிகள் நடந்தன. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எப்படி பணிகள் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் யார் யார்? என அரசின் அனைத்து தகவல்களையும் மக்கள் கேட்டு பெற முடியும். அப்படி கேட்கப்படும் விவரங்களை தலைமை தகவல் ஆணையர் தலைமையிலான குழு தான் இறுதி செய்து விவரங்களை தரும்.
எனவே இந்த பதவியில் ஆளும் அரசுக்கு நெருக்கமானவர்களே நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையானவராக கருதப்படும் இறையன்பு ஐஏஏஸ்க்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை நாயகன்
தமிழக ஐஏஏஸ் அதிகாரியாக இறையன்பு கடந்த 1988ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சிறந்த எழுத்தாளரான இவர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மாணவர்கள் பலருக்கும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பல நூல்கள் எழுதி உள்ளார். இறையன்பு ஐஏஏஸ் சிறந்த பேச்சாளரும் கூட, மாணவர்களுக்கு உற்சாகம் மற்றும் நம்பிக்கை தரும் வகையில் இவரது பல பேச்சுக்கள் இருந்துள்ளன.

விண்ணப்பம்
தமிழ்நாட்டில் ஐஏஏஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த இறையன்புக்கு கடந்த 2021ம் ஆணடு மே 7ம் தேதி பதவி ஏற்ற திமுக அரசு தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கியது. ஜுன் மாதம் 60 வயது நிறைவடையும் இறையன்பு அப்போது ஓய்வு பெறுகிறார். பணி ஓய்வுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில, அவர் தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவிக்காக நீதிபதி அக்பர் அலி தலைமையிலான தேர்வுக்குழுவிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

ராஜினாமா செய்வார்
இறையன்பு சமர்ப்பித்துள்ள மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி உறுதி செய்யப்படும நிலையில் இறையன்பு, இப்போது வகிக்கும் தலைமை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வார். மாநில தலைமை தகவல் ஆணையர் பொறுப்பு அதன் பிறகு கிடைத்தால் அவர் அந்த பொறுப்பில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.

யார் யாருக்கு வாய்ப்பு
இதனிடையே இறையன்புவிற்கு பிறகு புதிய தலைமை செயலாளராக யார் பதவி ஏற்பார்கள் என்ற பரபரப்பு தலைமை செயலக வட்டாரத்தில் நிலவுகிறது. அதில் மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, முருகானந்தம் மற்றும் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் யாரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் என்பது விரைவில் தெரியவரும்.

விமர்சனம்
இதனிடையே மாநில தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு இறையன்பு ஐஏஏஸ் விண்ணப்பித்திருப்பதை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தலைமை செயலாளர் பதவியில் இருந்துவிட்டு தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிப்பது சரியல்ல என்றும் அவர் காட்டமாக தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications