சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டென "அந்த" முடிவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி.. சசிகலா போட்ட பிளான் சக்சஸ் போலயே.. அப்ப ஓபிஎஸ்?

எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் புது வியூகத்தை கையில் எடுக்க போகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் கோர்ட் தீர்ப்பு வெளிவந்து இத்தனை நாட்கள் ஆன நிலையில், பொதுச்செயலாளர் என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, நிதானமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

எப்போதுமே தன்னுடைய ஆளுமையை நிரூபித்து கொண்டே வருவார் எடப்பாடி பழனிசாமி.. எப்போதுமே கட்சிக்குள் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்தி கொள்ள எடப்பாடி ரொம்பவே மெனக்கெடுவார்..

எனவே, இந்த முறை உட்கட்சி தேர்தலில் மட்டும் எடப்பாடியின் பாலிட்டிக்ஸ் வேற லெவலில் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

“பிறந்தநாள் அன்னிக்கே எடப்பாடி பழனிசாமியை இப்படி கிண்டல் பண்ணலாமா?” - விஜய் பட இயக்குநரின் சேட்டை!“பிறந்தநாள் அன்னிக்கே எடப்பாடி பழனிசாமியை இப்படி கிண்டல் பண்ணலாமா?” - விஜய் பட இயக்குநரின் சேட்டை!

போஸ்டிங்

போஸ்டிங்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. இந்த முறை உட்கட்சி தேர்தலிலும் மாவட்டம் முழுவதும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போஸ்டிங் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.. ஒருசில இடங்களில் மட்டுமே மாறுதல் செய்யப்பட்டது.. புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தன்னுடைய நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு மட்டுமே போஸ்டிங் தந்தார் எடப்பாடி பழனிசாமி..

மூவ் என்ன?

மூவ் என்ன?

இதற்கு பிறகு எந்தவிதமான அதிரடியையும் அவர் மேற்கொள்ளவேயில்லை.. சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றாரே தவிர, கட்சிக்குள் பெரிய அளவுக்கு மூவ் எடுக்கவில்லை.. ஆனால், சசிகலாவோ இந்த இடைவெளியைதான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.. ஆதரவாளர்களை திரட்டுவது, கட்சியை கைப்பற்றுவேன் என பேட்டி தருவது, அதிருப்தியாளர்களை சரிகட்டுவது, இதற்கு நடுவில் திமுகவை கேள்வி கேட்பது என அடுத்தடுத்த விஸ்வரூபத்தை கையில் எடுக்கவும்தான், எடப்பாடி தரப்பு சற்று ஜெர்க் ஆகிவிட்டது.

30 எம்எல்ஏக்கள்

30 எம்எல்ஏக்கள்

குறிப்பாக, கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, மேல்முறையீடு செய்ய போவதாக சசிகலா ஒருபக்கம் சொல்லி இருப்பதால், அதற்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் அதிமுக மேலிடத்துக்கு எழுந்துள்ளது.. அதுமட்டுமல்ல, அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை தட்டி தூக்க போவதாக, செய்திகள் கசியவும்தான், எடப்பாடியே நேரடியாக மும்முரமாக இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள். ஜெ.இருந்தபோது, மொத்தம் 61 எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதே வாக்குவங்கியை இப்போதுவரை எடப்பாடி பழனிசாமி தக்க வைத்து வருகிறார்.. அதாவது கட்சியை பலமாக இறுக்கி பிடித்து தன்னுள் வைத்துள்ளார்.

அபாய மணி

அபாய மணி

இவர்கள்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பக்கபலமாகவும் இப்போது வரை உள்ளனர்.. அதேசமயம், இவர்களில் யாருமே சசிகலா பக்கம் தாவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் வந்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான், பொதுச்செயலாளர் பதவி விஷயத்தில் மீண்டும் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டாராம்.. இப்போதைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாலும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்றும் நம்புகிறாராம் எடப்பாடி பழனிசாமி,

ஓவர்டேக்

ஓவர்டேக்

அதிமுகவின், கட்சியின் எந்த பொறுப்பாக இருந்தாலும், அது முதல்வர் வேட்பாளர் விவகாரமாகட்டும், எதிர்க்கட்சி தலைவர் பதவியாகட்டும், எதுவாக இருந்தாலும் ஓபிஎஸ்ஸை ஓவர்டேக் செய்துதான், தன்னுடைய தனி செல்வாக்கால் அனைத்தையும் எடப்பாடியால் எளிதாக பெற்று வந்து கொண்டிருக்கிறார்.. அதேபோல, இந்த பொதுச்செயலாளர் பதவிக்கும் செக் வைத்து மூவ் செய்ய ஆரம்பித்துள்ளாராம்.. இது ஓபிஎஸ்ஸுக்கு கலக்கம் தந்தாலும், சசிகலாவை தரப்பும் அலர்ட் ஆகி உள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, எடப்பாடியின் அரசியல் நகர்வை பாஜக மேலிடமும் கவனிக்க தொடங்கி உள்ளதாம்.. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Why is Edapadi palanisamy starting new strategy and and what happened in aiadmk எடப்பாடி பழனிசாமி புது வியூகத்தை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X