மீன் செதில் மாதிரி சிதறுதே! டெல்லி போகும் ஸ்டாலின்! தனித்து விடப்பட்ட எடப்பாடி! கணக்கு தப்பாகிடுச்சே
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நெருங்கும் நிலையில் அதிமுக கட்சிக்கான முக்கியத்துவம் தமிழ்நாட்டில் திடீரென குறைந்து உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் சர்ப்ரைஸ் கொடுப்போம், அதிக இடங்களை வெல்வோம் என்றெல்லாம் அதிமுக தலைவர்கள் தேர்தல் நேரத்தில் பேசி வந்தனர். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை வெல்வோம் என்றெல்லாம் பேசி வந்தனர்.

ஆனால் தேர்தல் முடிந்த பின் அதிமுக தலைவர்கள் பெரிதாக தேர்தல் வெற்றிகளை பற்றி பேசவில்லை. ஏன் எடப்பாடியே அதிமுக இத்தனை இடங்களை வெல்லும், திமுகவை இங்கெல்லாம் வீழ்த்துவோம் என்றெல்லாம் எங்கும் பேசவில்லை.
தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க அதிமுக கேம்ப் மேலும் அமைதியாக வேண்டுமானால் மாறி இருக்கிறதே ஒழிய அங்கே பெரிய அளவில் நம்பிக்கையான சத்தங்கள் எதுவும் வரவில்லை.
அதிமுகவை நம்பாத பாஜக: மத்தியில் பாஜகவிற்கே மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு என்றுதான் சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் பாஜக அதிமுகவிடம் நட்பாக செல்ல வேண்டும். தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்க அதிமுக தயவு தேவைப்பட்டால் அதிமுகவை பாஜக நாட வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஆனால் அப்படி இருந்தும் கூட அதிமுகவை பாஜக பெரிய பொருட்டாக மதிக்கவில்லை. அதிமுக தமிழ்நாட்டில் அதிக அளவில் இடங்களை பெற வாய்ப்பு இல்லை என்று நினைத்து பாஜக இப்படி அதிமுகவை சீண்டுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் பாஜக அதிமுகவை பெரிதாக நம்பி இருக்கவில்லை.
உதாரணமாக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று, அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைக்கும் என்றும், இந்துத்வா பற்றிய விவாதத்தில் அதிமுகவுடன் விவாதத்திற்கு பாஜக ரெடியாக உள்ளது
இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை. ஜெயலலிதா அவர்களும் இந்துத்துவாவாதி தான். ஜெயலலிதா இருந்திருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு போயிருப்பார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது, என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு காரணமாக அதிமுக - பாஜக இடையே தமிழ்நாட்டில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் பகையை பாஜக வெகுவாக சம்பாதித்துக்கொண்டது. அதிமுகவை தேர்தல் ரிசல்ட் நெருங்கும் நேரத்தில் தேவையின்றி பாஜக பகைத்துக்கொண்டு உள்ளது.
ஸ்டாலின் டெல்லி: இன்னொரு பக்கம் ஸ்டாலின் - காங்கிரஸ் கூட்டணியும் வலிமையாக உள்ளது. ஸ்டாலின் பாஜக பக்கம் செல்ல வாய்ப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சி அதிமுக பக்கம் செல்லும் வாய்ப்பும் இல்லை.
ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.முதல்வர் ஸ்டாலின், ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
அப்படி இருக்க தேசிய அளவில் ஸ்டாலினும் கவனிக்கப்பட்டு வருகிறார். இதில் எடப்பாடி மட்டுமே பாஜகவாலும் முக்கியத்துவம் பெறாமல், காங்கிரஸ் கட்சியும் சின்ன கேப் கூட கொடுக்காமல் எடப்பாடியை ஒதுக்கி வைத்து உள்ளது. இதனால் எங்கே எடப்பாடியின் தேசிய தேர்தல் கணக்கு தப்பாகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications