அப்செட்டாயிட்டாராமே மோடி.. பாஜகவில் இவங்க "3 பேர்"தான் ஜெயிக்க போறாங்களா? திமுக வேற கெத்து காட்டுதே
சென்னை: தமிழக பாஜகவின் பிரச்சாரங்கள் அனலடித்து கொண்டிருக்கும் நிலையில், சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
தனித்து கூட்டணி வைத்து போட்டியிடுவது என்று இந்த முறை சற்று அதிகமாகவே ரிஸ்க் எடுத்துள்ளது தமிழக பாஜக.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி: தேசிய தலைவர்களும் அடிக்கடி சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. அதுவும், 7வது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ள பிரதமர் மோடி, 8வது முறையாக மறுபடியும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தற்போதுதான், வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி.. பிறகு, மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல். முருகன் ஆகியோரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.
ராஜ்பவன்: சென்னையில் ரோட் ஷோவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அன்றைய இரவு ராஜ்பவனிலும் தங்கியிருந்தார்.. பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் அமைதியுடன் கவனித்து வந்த திமுக, இந்த முறை, விழித்து கொண்டதாக தெரிகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அரசு மாளிகையான ராஜ்பவனில் மோடி தங்கியது தேர்தல் விதி மீறல் என்ற சர்ச்சையை புதிதாக தொடங்கியிருக்கிறது திமுக!! இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், தேர்தல் ஆணையத்தில் திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பங்களா: ஒருவேளை, மோடி மீது வழக்குப்பதிவு செய்யவில்லையென்றால், தமிழக முதல்வரும் இனி மாவட்ட சுற்றுப்பயனத்தின் போது அரசு பங்களாவில் தங்குவார் என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் சற்று சட்டரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாம் தமிழக தேர்தல் ஆணையம்.
இதெல்லாம் பாஜக தரப்பில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. அதிலும் பிரதமர் மோடியே இதை எதிர்பார்க்கவில்லையாம்.. ராஜ்பவனில் தங்கியிருந்த மோடி, ரோட் ஷோவில் பொதுமக்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தாராம்.. ஆனால், அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்பதால் மிகவும் அப்-செட்டாகி விட்டாராம். எனவே, தமிழக பாஜகவினருடன் ராஜ்பவனில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்த புரோக்கிராமையும் கேன்சல் செய்துவிட்டாராம் மோடி.
பாஜக வெற்றிவாய்ப்புகள்: அதுமட்டுமல்ல, அன்றைய தினம் இரவு, கவர்னருடன் 1 மணி நேரம் விவாதித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என மோடி விவாதித்தாராம்.
ராஜ்பவனுக்கு கிடைத்த தகவலின்படி, பாஜக மற்றும் கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கவர்னர் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சவுமியா அன்புமணி, தமிழிசை சவுந்தராஜன், நயினார் நாகேந்திரன் என 3 பேர் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்கிறது கமலாலயம் தரப்பு...
ஆக, யூகங்களும், கணிப்புகளும், இப்படி ஒருபக்கம் கிளம்பிக் கொண்டிருக்க, உண்மை நிலவரம் என்னவென்று வாக்குப்பதிவின்போதுதான் தெரியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications