தங்கம் விலை.. வெறும் 10 நாளில் நடந்த வரலாறு காணாத உச்சத்தின் பின்னணி.. இன்று நடந்த பெரிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை சந்தித்து வந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.78 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஜிஎஸ்டி, செய்கூலி மற்றும் சேதாரத்தை சேர்த்தால், 88 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்திருக்கும். சுமார் 90 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உங்கள் கையில் பணம் இருந்தால் தான் ஒரு பவுன் தங்கம் வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4 ஆயிரம் அதிகரித்திருந்தது. கடந்த 10 நாளில் நேற்று தான் கிராமுக்கு 10 ரூபாயும், பவுனுக்கு 80 ரூபாயும் குறைந்தது. இன்று சட்டென மீண்டும் ஏறிவிட்டது

பொருளாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு விதித்த வரி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். எப்போது எல்லாம் ஆபத்து வருமோ, அப்போது எல்லாம் உலகமே தங்கத்தில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வகையில் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதனால் தங்கம் விலை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்தே ஏற தொடங்கியது.

Gold Gold rate

ஆகஸ்ட் 22ம் தேதிக்கு பிறகு அதிரடி மாற்றம்

கடந்த மாதம் 6-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. அதன், பின்னர் சற்று விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் எல்லாம் ஆகஸ்ட் 22ம் தேதி வரை தான். அதன்பிறகு படிப்படியாக ஏறத்தொடங்கியது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்து விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்தை கடந்து இருந்தது. அதனையடுத்து ஆகஸ்ட் 27-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.76 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.77 ஆயிரத்தையும் தாண்டியது. ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது.

தங்கம் விலை உயர்வு

செப்டம்பர் 2ம் தேதி அன்று ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 725-க் கும், ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. செப்டம்பர் 3ம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 805-க்கும், ஒரு பவுன் ரூ.78 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

இன்று (செப்டம்பர் 5 தங்கம் விலை) எப்படி உள்ளது

கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி வரை நிலவரப்படி 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.500-ம், பவுனுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து இருந்தது. செப்டம்பர் 4ம் தேதியான நேற்று தான் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு கிராமுக்கு 10 ரூபாயும், பவுனுக்கு 80 ரூபாயும் குறைந்தது. தங்கம் விலை ஒரு கிராம் 9,795 ரூபாய்க்கும், ஒரு பவுன் 78,360 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று தங்கம் விலை சற்று குறையும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தங்கம் விலை இன்று மீண்டும் ஏறி உள்ளது. சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று 9,865 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 78,920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+