Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேம் ஓவர் அல்லது கேம் சேஞ்சர்.. மோடிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்.. ஃபோகசை திருப்பிய பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிற்கு தேசிய அளவில் மிகப்பெரிய சவால் ஒன்று உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட கேம் ஓவர் அல்லது கேம் சேஞ்சர் என்று சொல்லும் அளவிற்கு முக்கியமான சவால் ஒன்று மோடிக்கு வந்துள்ளது.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மாநில தேர்தல்களிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்து உள்ளன.

exit polls 2024 haryana election exit polls haryana assembly elections 2024 2024

ஹரியானா எக்ஸிட் போல் வெளியாகி வரும் நிலையில், அங்கே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

ரீபப்ளிக் -மெட்ரைஸ் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 55-62 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது ரிபப்ளிக்-மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 30.30% வாக்குகளுடன் 18-24 வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 35.80% வாக்குகளுடன் 55-62 வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JJP+ 0-3 இடங்களை 6.60% வாக்குகளுடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜக 18-24; 30.30%
INC 55-62; 35.80%
JJP+ 0-3; 6.60%
INLD+ 3-6; 12.10%
இந்தியன் 2-5; 15.20%

அதேபோல் பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று Peoples Pulse அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும் என்று Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் - Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்- எக்ஸிட் போல் கணிப்பு தெரிவித்துள்ளது. இப்படி லோக்சபா தேர்தலை தொடர்ந்து சட்டசபை தேர்தல்களிலும் பாஜக தோல்வி முகம் கண்டு இருப்பதால் எங்கே.. மோடி அலை தேசிய அரசியலில் ஓய்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தல் சரிவு: கடந்த ஜூன் மாதம் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உதவியுடன் பாஜக ஆட்சியே நடக்கிறது.

2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மொத்த இடங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களில் பாஜக அல்லது என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்து உள்ளனர்.

164 தொகுதிகளில் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்கள் மற்றும் உரைகளை நிகழ்த்தி உள்ளார். அதில் பாஜக/என்டிஏ வேட்பாளர் 77 இடங்களில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்துள்ளனர். மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் 87ல் வெற்றி பெற்று உள்ளனர்.

ராஜஸ்தான் தோல்வி: முக்கியமாக ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில், பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையாக பேசினார். இங்கே பாஜக கிட்டத்தட்ட 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. காங்கிரஸ் ஆதரவு பாரதிய ஆதிவாசி கட்சி வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். பஞ்சாபின் பல்வேறு தொகுதிகளான ஹோஷியார்பூர், ஜலந்தர், குர்தாஸ்பூர், பாட்டியாலா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பல பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார்.

உத்தரப்பிரதேசத்திலும் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கடுமையாகச் சுருங்கியது . மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் வெறும் 33 இடங்களுக்குக் பாஜக குறைக்கப்பட்டது, சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. உ.பி. முழுவதும் பிரதமர் மோடி பல பேரணிகளை நடத்தினார். காஜிபூர் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்தார். அங்கே சமாஜ் வாதி கட்சியின் முக்தார் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரியிடம் காஜிபூர் தொகுதியை பாஜக இழந்தது.

இப்படி மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் சில முக்கிய இடங்களை பாஜக இழந்தது. இது போக தமிழ்நாட்டில் மோடி பிரச்சாரம் செய்த அண்ணாமலையின் கோவை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.

உ.பி தவிர, பாஜக மற்றும் என்.டி.ஏவின் மிகப்பெரிய இழப்புகள் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்துள்ளன. அங்கு பிரதமர் மோடி 18 பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களை நடத்தினார். மகாராஷ்டிராவில், சோலாப்பூர், மாதா, லத்தூர், தாராஷிவ் போன்ற இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வியடைந்தது.

மோடி பிரச்சாரம் இல்லை: இதனால் இந்த முறை ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு மோடி பெரிதாக பிரச்சாரமே செய்யவில்லை. 2019ல் 10 முறை தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தியவர் இந்த முறை ஹரியானாவில் 4 கூட்டங்கள் என்று குறைத்துக்கொண்டார். ஆனால் அதற்கும் பெரிதாக கூட்டம் இல்லை. ஈர்ப்பும் இல்லை.

மகாராஷ்டிரா: இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த மாதம் நடக்க உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பாஜகவிற்கு பெரிய சவாலாக இருக்கும்.

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் தோல்வியை தழுவும் பட்சத்திலும் கூட மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தாது. அவரை பலவீனப்படுத்தாது. மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அவர் ஏற்கனவே பலவீனமடைந்திருந்தாலும் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் தோல்வியை தழுவும் பட்சத்திலும் அது மோடியை பெரிதாக பாதிக்காது. ஆனால் அடுத்த மாதம் நடக்க உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பாஜகவிற்கு பெரிய சவாலாக இருக்கும்.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல்கள் நடக்க உள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாஜக தோல்வி அடைந்தால்.. அது மோடி மேஜிக்கின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாஜகவிற்குள் மோடிக்கு எதிராக குரல்கள் நிச்சயம் கேட்கத் தொடங்கும். மோடியின் அரசியல் மூலதனத்தைக் காப்பாற்ற பாஜகவிற்கு மகாராஷ்டிராவின் வெற்றி மிக மிக முக்கியமான தேவையாகும்.. அப்படிப்பட்ட மகாராஷ்டிராவில் பாஜக என்ன செய்யும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+