நேரம் பார்த்து இப்படி நடக்கணுமா? ஓரம் கட்டப்பட்டாரா ஓபிஎஸ்.. டெல்லி போகாதது ஏன்? காரணமே வேறாம்!
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசரிப்பு விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக வட்டாரத்தில் இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று டெல்லியில் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாஜக - எடப்பாடி இடையிலான உறவு அவ்வளவு சுமுகமாக கடந்த சில வாரங்களாக இல்லை என்று கூறப்படுகிறது.
முக்கியமாக மாஜி அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, ஜிஎஸ்டி குறித்து எடப்பாடி விமர்சனம் என்று பல விஷயங்கள் காரணமாக இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

பாஜக நட்பு
இந்த நிகழ்வில் பாஜகவிற்கு நட்பாக இருக்கும் கட்சிகள், பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இந்த நிகழ்விற்கு செல்லவில்லை. இதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த போது அதற்காக டெல்லி சென்றார். தன் மகன் எம்பி ஓ பி ரவீந்திரநாத் உடன் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். முர்மு வேட்புமனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடியுடன் ஓ பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். ஆனால் இந்த முறை ஓ பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவில்லை.

பாஜக நெருக்கம்
பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் பல மாநில தலைவர்கள் டெல்லி சென்ற நிலையில் ஓ பன்னீர்செல்வம் செல்லவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் டெல்லி பாஜக ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளவில்லையோ என்ற கேள்வி இதனால் எழுந்தது. டெல்லி பாஜக இவரை ஓரம்கட்டிவிட்டு, எடப்பாடியை அரவணைக்கிறதோ.. அதனால்தான் எடப்பாடி மட்டும் கூட்டத்திற்கு சென்று இருக்கிறாரோ என்ற அதிமுக வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

பெரிய சப்போர்ட்
அதாவது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சப்போர்ட் இல்லாததால் அவரை டெல்லி புறக்கணிக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ.. அப்படி எல்லாம் இல்லைங்க.. ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு வர வேண்டிய நேரத்தில் அவருக்கு கொரோனா வந்துவிட்டது. நேற்றுதான் அவர் டிஸ்சார்ஜ் ஆனார். அப்படி இருக்கையில் அவர் எப்படி டெல்லி செல்ல முடியும். அவர் இன்னும் தனிமைப்படுத்த வேண்டும்.
Recommended Video

உண்மை என்ன
டெல்லி அவரை புறக்கணிக்கவில்லை. எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் வர வேண்டும் என்றே டெல்லி நினைத்தது. ஒருவேளை இருவரும் வந்திருந்தால் டெல்லியில் சமாதான பேச்சுவார்த்தை கூட நடந்து இருக்கும் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள். அதோடு.. இந்த நேரத்தில் டெல்லி போய் இருந்தால் சமரசம் பேசி இருக்கலாம். இப்படி நேரம் பார்த்து கொரோனா வந்துவிட்டதே என்று ஓபிஎஸ்ஸும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications