சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: அக்ஷய திரிதியை நாளில், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

சித்திரை மாதம் அமாவாசையில் இருந்து 3 வது வளர்பிறையில் வரும் திதி அக்ஷய திரிதியையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அக்ஷய என்றால் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்பது பொருள்.

why people are interested to buy gold on Akshaya thiritiyai

இந்த ஆண்டுக்கான அக்ஷய திரிதியை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் வாங்கும் பொருட்கள் வீட்டில் குறைவின்றி இருக்கும் என்பது ஐதீகம்.

ஆகையால் இந்த அக்ஷய திரிதியை நாளில் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்கினால், ஆண்டு முழுவதும் தங்கம் வாங்க முடியும் .என்பதால் மக்கள் இந்த அக்ஷய திரிதியை நாளில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று அட்சய திருதியை:காலையிலேயே கல்லாவைத் திறந்து வைத்த நகைக் கடைகள்.. குவிந்த மக்கள் இன்று அட்சய திருதியை:காலையிலேயே கல்லாவைத் திறந்து வைத்த நகைக் கடைகள்.. குவிந்த மக்கள்

மேலும் அக்ஷய திரிதியை நாளில் செய்யப்படும் செயல்களும் தடையின்றி நடக்கும் என்பதால் மக்கள் சுபகாரியங்களையும் இந்த நாளில் தொடங்குகின்றனர்.

அக்ஷய திரிதியை நாளில்தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றல்ல என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்றும் இல்லாத ஏழை மக்களுக்கு தானம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அக்ஷய திரிதியை நாளில் செய்யும் தானங்கள் பலமடங்கு புண்ணியத்தை தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

English summary
why people are interested to buy gold on Akshaya thiritiyai. If we buy jewels on Akshaya thiritiyai it will increase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X