நீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே!
கூட்டணி குழப்பத்தில் மோடியின் பாஜக அரசு சிக்கி தவித்து வருகிறது.
Recommended Video

சென்னை: "நீ வரலாம் வா.. நீ வரலாம் வா... " என கூவி கூவி அழைக்கும் நிலைமைக்கா ஒரு தேசிய கட்சியின் நிலைமை ஆக வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, அச்சே தீன் என்ற கலர் கலர் வார்த்தைகளை கூறி 4 வருடங்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.
அன்றைக்கு ஒவ்வொரு மாநிலத்தின் சிறிய சிறிய கட்சிகளும்கூட ஓடிப்போய் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தார்கள். நம்ம ஊரிலிருந்துகூட விஜயகாந்த், ராமதாஸ், பாரிவேந்தர் போன்றோர் சென்று மோடியை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து ஆதரவை தந்தார்கள்.

ரஜினி, கமல்
ஆனால் இப்போது இவரை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையடுத்தே பாஜக கதவுகள் திறந்து இருக்கின்றன, பழைய நண்பர்களை இணைத்து கொள்ள தயார் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ரஜினி, கமல் வந்தால்கூட சேர்த்துகொள்வோம் என்கிறார்.

இதுதான் அழகா?
ஆளும் மத்திய அரசின் உச்ச பொறுப்பில் இருப்பவரின் பேச்சு கடைசியில் இப்படியா இருக்க வேண்டும்? தேடி வந்து கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால்தானே அந்த கட்சிக்கு மதிப்பும், மரியாதையும். ஆனால் இதுவரை யாருமே வந்து கூட்டணி பற்றி பேசாமல் இருப்பது தேசிய அளவிலான பாஜகவுக்கு அழகா?

விஜயகாந்த்
ரஜினி, கமலை சேர்த்து கொள்வது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் நடிகர்கள்கூட தேடி வந்துகூட்டணி பற்றி பேச முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது என்பதுதான் புரிகிறது. இருப்பினும் இதையும் குறை கூற முடியாது. காரணம், விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்த கட்சிதான் பாஜக.

நல்ல முத்து
அதுவும் இல்லாமல் போன தேர்தலில் எப்படி சும்மா கிடந்த வாஜ்பாயை கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தி ஓட்டு கேட்ட பாணிதான் இப்பவும் ஆரம்பித்துள்ளது. "தவறான கட்சியில் சரியான நபர்" என்ற பெயரை வாஜ்பாய் பெற்றது அவரது நல்ல குணத்துக்காக. அடிப்படை இயல்புக்காக. ஆனால் அதனைகூட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது பாஜகவுக்கு கை வந்த கலை.

வாஜ்பாய் முகம்
ஓட்டு வாங்கும்போது மட்டும் வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்களின் முகத்தை காட்டி அதற்கு பின்னால் பாஜகவின் கோர முகம் ஒளிந்து கிடப்பது வழக்கமாகி விட்டது. இப்போது வாஜ்பாய் மறைந்து விட்டதால், வரும் தேர்தலில் அவரது படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயற்சிக்கலாம் பாஜக. மோடியின் முகத்தைக் காட்டுவதை விட வாஜ்பாய் முகத்தைக் காட்டினால் ஏதாவது கொஞ்சம் கிடைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.

ஏன் ஒதுக்கப்படுகிறோம்?
யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்பதும், ரஜினி, கமல்கூட எங்களிடம் இணையலாம் என்பதும், தமிழகத்தில் பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று நூல் விட்டு கொண்டிருப்பதும் ஒரு நாட்டின் பிரதமருக்கோ, ஆளும் மத்திய அரசுக்கோ, தேசிய அளவிலான ஒரு கட்சிக்கோ அழகல்ல என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்பட்டு வருகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.. ஆனால் அதை விட முக்கியம்.. ஏன் இப்படி ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்து கொண்டு அதை சரி செய்ய முன்வருவதுதான் கட்சியின் எதிர்காலத்திற்கு ரொம்ப முக்கியம்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications