தொடரும் மர்மங்கள்.. அன்பு ஜோதி ஆசிரமம்! பெங்களூருக்கு அனுப்பப்பட்ட 15 பேர்! உடலுறுப்பு திருட்டா?
அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து புதிய பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது மேலும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வருகிறது. அங்கு இத்தனை காலம் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக இருந்தது.
அந்த காப்பகத்தில் இருந்த பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.. பலாத்காரத்திற்கு இணங்காத பெண்களை அவர்கள் குரங்குகளை விட்டுக் கடிக்கவிட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம்
விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் தான் பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளன. மேலும், வளர்ப்பு குரங்குகளை வைத்துக் கடிக்க வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆசிரமம் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஆசிரமத்திற்குச் சீல்
இதையடுத்து அந்த ஆசிரமத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமத்தை நிறுவிய ஜூபின் பேபி குறித்தும் ஆசிரமம் குறித்தும் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது. ஜூபின் பேபி முதலில் கோவை கோட்டக்குப்பம் பகுதிகளிலும் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். கோவை ஆசிரமத்தில் சில பிரச்சினைகள் எழுந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ஆசிரமம்
கேரளாவின் எர்ணாவூரை சேர்ந்த இவர், ஆசிரமத்தைத் தொடங்கி.. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்தும் கூட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.. இப்படி ஆதரவற்றவர்களைச் சேர்ப்போருக்குக் குறிப்பிட்ட தொகையும் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதற்கிடையே இந்த ஆசிரமத்தில் இருக்கும் பலரையும் இவர் பெங்களூரில் ஆட்டோ ராஜா என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்திற்குக் கடந்த 2021இல் அனுப்பி ரசீது பெற்றுள்ளார்.

15 பேர் மாயம்
அவர்களில் 13 பேர் குளியலறை ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு 2022 மார்ச் 4ஆம் தேதி தப்பியுள்ளனர். மேலும், 20 பேரின் உடல்நிலை சரியாகிவிட்டதால் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற இருவரும் சொந்த ஊரான விழுப்புரம் திரும்பியுள்ளனர். இருப்பினும், மற்ற 11 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லையாம். மேலும், தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பத்மா, புதுச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கண்ணதாசன், நடராஜன் உட்பட 4 பேரும் மாயமானதாகக் கூறப்படுகிறது.

உடலுறுப்பு திருட்டு?
பெங்களூருக்கு அனுப்பப்பட்ட இந்த 15 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவர்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டதற்கான ரசீதையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரில் இவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்குமோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக ஆட்டோ ராஜையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடி
இந்த வழக்கில் ஆசிரமத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவைச் சேர்ந்த விஜி மோகன்(46), பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் என 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை இப்போது சிபிசிஐடி போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications