ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்தது ஏன்? மீண்டும் மொதல்ல இருந்தா.. சகோதரர் சத்யநாராயணராவ் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ரஜினிகாந்த் சந்தித்தது ஏன் என்பது குறித்து அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் தலைவர் ரஜினிகாந்த் அறக்கட்டளை என்பதை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சத்யநாராயண ராவ் பேசுகையில் ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ரஜினி ரசிகர் சந்தானம் ஆரம்பித்துள்ளார்.

ரஜினி ஆசிர்வாதத்தில் இந்த நிகழ்வு நடந்தது. ரஜினி ஷூட்டிங்கெல்லாம் முடித்துவிட்டு ரசிகர்களை சந்திப்பார். இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமையும் என்றார்.

ரஜினி

ரஜினி

அப்போது அவரிடம் , ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் இது இறைவனிடம்தான் உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரஜினி இருக்கிறார். படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.

ஆளுநருடனான சந்திப்பு

ஆளுநருடனான சந்திப்பு

ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு, பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார் என சத்யநாராயண ராவ் தெரிவித்தார். ஆளுநரை ரஜினி காந்த் சந்தித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில் ஆளுநருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார்.

ஆளுநருடன் அரசியலா

ஆளுநருடன் அரசியலா

ஆளுநருடன் அரசியலா என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்தின் டெல்லி பயணம், ஆளுநருடனான சந்திப்பு ஆகியவற்றை வைத்து ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு இழுத்துவிட பாஜக முயற்சித்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு ரஜினி ஆதரவாளரான அர்ஜுனமூர்த்தி மீண்டும் பாஜகவிலேயே ஐக்கியமானார்.

ஏப்ரல் மாதம் மீண்டும் சந்திப்பு

ஏப்ரல் மாதம் மீண்டும் சந்திப்பு

ரஜினி வரும் ஏப்ரல் மாதம் ரசிகர்களை சந்தித்து முக்கிய முடிவுகளை அறிவிக்கிறார் என சத்யநாராயண ராவ் கூறியதை பார்த்தால் ஏற்கெனவே கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஏப்ரல் டூ மே மாதத்தில்தான் ரசிகர்களை சந்தித்த ரஜினி தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறியிருந்தார். தற்போது அவர் ஏப்ரல் மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் என்றால், அது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் சந்திப்பாக இருக்குமே தவிர அரசியல் குறித்தெல்லாம் அவர் அறிவிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எனினும் ரஜினியின் முடிவு எப்படி மாறுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+