இதுதான் சிஎஸ்கே.. ஐபிஎல்லை திரும்பி பார்க்க வைத்த ஒரு இமேஜ்.. ஆஹா தோனியா.. இப்படித்தான் இருக்கணும்!
சென்னை: நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் பவுலர் மதீஷ் பதிரானாவிடம் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக வென்றுள்ளது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 235/4 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி வெறும் 186-8 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் எடுக்க சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று சிஎஸ்கே ஒப்பனர் கெய்க்வாட் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். தேவன் கான்வே 40 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடக்கம். இன்னொரு பக்கம் சிவம் துபே 50 ரன்களை 21 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரஹானே 29 பந்தில் அவுட் ஆகாமல் 71 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம்.
சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே, தீக்சான சிறப்பாக பவுலிங் செய்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். சிஎஸ்கே அணியின் பவர் பிளே பவுலிங் அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

சிஎஸ்கே:இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் பவுலர் மதீஷ் பதிரானாவிடம் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த போட்டி முழுக்க பதிரானா வீசிய 4 ஓவர்களில் அவரிடம் தோனி அன்பாக நடந்து கொண்டு வழி நடத்தினார். நண்பர் போல தோளில் கை போட்டு ஆலோசனை செய்து வழி நடத்தினார்.
முக்கியமாக டெத் ஓவர்களில் எப்படி வீச வேண்டும் என்று இரண்டு பாலுக்கு ஒருமுறை அருகில் சென்று ஆலோசனை வழங்கினார். சின்ன குழந்தைக்கு பாடம் எடுப்பது போல பதிரானாவிற்கு தோனி பாடம் எடுத்தார்.
கடந்த போட்டியிலும் பதிரானா டெத் ஓவர்களில் சிறப்பாக வீசிய போது அவரிடம் டீச்சர் போல அருகே நின்று எப்படி வீச வேண்டும் என்று தோனி அறிவுரை வழங்கினார். அதை போலவே பதிரானாவும் பவுலிங் செய்ய.. சிஎஸ்கேவின் வெற்றிக்கு அது காரணமாக அமைந்தது.

பதிரானா வந்த பின் சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. முக்கியமாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே சிறப்பாக, பிரஷர் இல்லாமல் பவுலிங் செய்ய தொடங்கி உள்ளது.
இதற்கு முன் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு இருந்த பிரஷர் பதிரானா வந்த பின் இல்லை. நேற்று மேட்சுக்கு இடையே பதிரானாவிற்கு தோனி சில ஆலோசனைகளை வழங்கினார். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் மீது கைபோட்டு.. தோனி சில நிமிடங்கள் ஆலோசனை வழங்கினார். இளம் வீரர் ஒருவரின் பவுலிங்கில் இவ்வளவு நம்பிக்கை கொண்டு, அவருக்கு தோனி ஆலோசனை வழங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
20 வயதே ஆன இளம் வீரர் ஒருவர் 41 வயது லெஜண்டிடம் இருந்து நேரடியாக இப்படி ஆலோசனைகளை பெறுவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications