Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர்கள் இருக்காங்க.. உதயநிதிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. ரெடியான படை.. ஒடிசா கிளம்பும் SOS டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஆலோசனை செய்ய, ஆய்வு செய்ய உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்கிறார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

 Why Udhayanidhi Stalin is going to Odisha with Tamil Nadu rescue team after train derail accidents?

இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தமிழர்கள்: சென்னை - கொல்கத்தா வரை இயங்கும் இந்த கோரமண்டல் ரயில் இருவழி ரயில் ஆகும். இது பல மாநிலங்களை கடந்து வருவதால் இந்தியாவில் மிகவும் பிஸியான ரயில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக இதே தூரத்திற்கு விமான கட்டணம் குறைந்தபட்சம் 7 ஆயிரம் உள்ள நிலையி ரயில் கட்டணம் 1500 வரைதான் இருக்கிறது.

அதனால் ரயில் பயணத்தையே அதிக மக்கள் இந்த ரூட்டில் விரும்புவார்கள். கிட்டத்தட்ட 36 மணி நேர பயணம் ஆகும் இது. இந்த ரூட்டில் தமிழர்கள் அதிகம் பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில்தான் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் ரயிலில் அதிக அளவில் தமிழர்கள் இருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

தமிழர்கள் பலரும் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.

இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் தமிழர்கள் இதில் அதிகம் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக போஸ்ட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்ப்லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

கடந்த வருடம்தான் ஒடிஷாவிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனதும் ஒடிசா சென்று அங்கு உள்ள மைதானங்களை பார்வையிட்டார். இதில் நவீன் பட்நாயக்குடன் அவர் நெருக்கம் ஆனார். இந்த நிலையில் உதயநிதியை தொடர்பு கொண்டு அவரையும் ஒடிசா செல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

உதயநிதியும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் எஸ்ஓஎஸ் டீமுடன் நாளை ஒடிசா செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+