சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்க் காதுக்கு எட்டியிருச்சோ.. அலறி அடித்துக் கொண்டு வாட்ஸ்அப் விளக்கம் அளிக்க காரணம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: புதிய விதிமுறைகள் குறித்த மக்களின் கோபம் பேஸ்புக் ஓனர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு எட்டியிருக்கும் போல.. ஏனெனில் உங்களின் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் தகவல்களை பேஸ்புக்குடன் பகிர மாட்டோம் என புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடியாக விளக்கமளித்துள்ளது.

Recommended Video

    பகிரப்படுகிறதா தனிநபர் விவரங்கள்…? விழுந்தடித்து விளக்கம் சொன்ன வாட்ஸ் அப்..!

    புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

    இந்த விதிமுறைகளின் காரணமாக பயனாளர்களின் தொடர்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்த தகவல்களையும் பேஸ்புக்கிடம் வாட்ஸ் அப் கொடுக்க போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    மிரட்டும் ஜூம் - கூகுள் மீட்.. வாட்ஸ்ஆப் அதிரடி.. ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் பார்த்துட்டே பேசலாம்மிரட்டும் ஜூம் - கூகுள் மீட்.. வாட்ஸ்ஆப் அதிரடி.. ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் பார்த்துட்டே பேசலாம்

    டெலிகிராம்

    டெலிகிராம்

    அத்துடன் பலரும் தங்களது தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்ஆப் சேமிக்கிறது என்ற அச்சத்திலும் புதிய விதிமுறைகளாலும் அதில் இருந்து விலகிய பலர், சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கடந்த 10 நாளில் மட்டும் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப் டவுன்லோடு செய்வோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்தது.

    விளக்கம்

    விளக்கம்

    இந்நிலையில் இந்த நடவடிக்கை பயனரின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் தனியுரிமையை பாதிக்காது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

    அழைப்புகள்

    அழைப்புகள்

    இதன்படி. வாட்ஸ்அப்பில் பயனர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது. உங்கள் தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகள், செய்திகள் கண்காணிக்கப்படாது.

    உங்கள் தரவுகள்

    உங்கள் தரவுகள்

    உங்களுடைய இருப்பிடம் குறித்த தகவல்கள், உங்கள் தொடர்புகள் உள்ளிட்டவை பேஸ்புக்குடன் பகிரப்படாது. வாட்ஸ்ஆப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். உங்கள் தரவுகளை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். குறுஞ்செய்திகளை அனுப்பியவுடன் மறைய வைக்கும் வசதியை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

    வாட்ஸ் அப் விளக்கம்

    வாட்ஸ் அப் விளக்கம்

    வாட்ஸ்அப் விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட காரணம் சிக்னல் செயலி தான். சிக்னல் செயலியை கிடந்த சில நாட்களில் மட்டும் பல லட்சம் டவுன்லோடு செய்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த வாட்ஸ் அப் விளக்கம் அளித்து உள்ளது.

    English summary
    whatsapp explain new rules and guidelines about privacy policy due to signal and telegram app is important reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X