நாளைக்கு "ரிசல்ட்".. அதிமுக ஏன் "அந்த" வார்த்தையை சொல்கிறது.. "யாரை" சொல்கிறது.. அவங்களையா?
சென்னை: எக்ஸிட் போல்கள் வெளியானதை அடுத்து, அதிமுக நேற்று விடுத்திருந்த அறிக்கையானது, ஓரிரு சந்தேகங்களை அரசியல் உலகில் கிளப்பி விட்டு வருகிறது.
நேற்று முன்தினம், தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்கள் வெளியாகின.. அதில், திமுக கூட்டணிக்கு 170 முதல் 190 வரை இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.. அதேபோல, அதிமுக கூட்டணி 60ஐ தாண்ட வாய்ப்பில்லாத சூழலும் வெளிப்பட்டது.
எனவே திமுக தொண்டர்கள் பூரிப்பில் திளைத்து வருகின்றனர்.. அதேசமயம், அதிமுக தொண்டர்களோ சோகத்திலும், கலக்கத்திலும் உள்ளனர். இந்த சமயத்தில், அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டி தந்திருந்தார்.. இந்த கணிப்புகளெல்லாம் அதிமுக தொண்டர்களை சோர்வடைய செய்ய திமுகவே செய்யும் வேலை, 2016 போலவே அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என்று உறுதியாக கூறினார்..

அதிமுக தலைமை
இதையடுத்து, அதிமுக தலைமையும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் சேர்ந்து, தங்கள் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இதை வெளியிட்டிருந்தனர்.. அதில்,"அதிமுக என்னும் ஆழமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்து விடாமல், அண்டி வந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்ப விருட்சம் என்பதே உண்மை" என்ற ஒரு வாக்கியத்தையும் கூறியிருந்தனர்..

விவாதம்
இதுதான் விவாதத்தை கிளப்பி உள்ளது.. அண்டி வந்தவர் என்று அதிமுக சொல்வது யாரை? ஒருவேளை பாஜகவாக இருக்குமோ? ஜெயக்குமார் சொல்வதுபோல, 2016 தேர்தலைபோலவே இந்த முறையும் திடீர் மாற்றம் கடைசி நேரத்தில் வரக்கூடுமா? என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.. இதுகுறித்து, நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னது இதுதான்:

சறுக்கல்
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், எம்பி தேர்தலின்போது சறுக்கலை சந்தித்தோம் என்பதை அதிமுக தலைமை நன்றாகவே தெரிந்து கொண்டது.. அந்த தேர்தல் முடிந்ததுமே, பாஜகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டனர்.. நடுநடுவே நடந்த இடைத்தேர்தலின்போதுகூட, பாஜகவை அதிமுக கண்டுகொள்ளாமல்தான் சந்தித்தது.. அதேபோல, இந்த முறையும், பாஜக இல்லாமல் தனித்து போட்டியிடவே எடப்பாடியார் பெரிதும் நினைத்தார்..

60 இடம்
அதனால்தான் எல்.முருகன் எப்படி எப்படியோ கொக்கி போட்டும், இந்த 6 மாதமாகவே கூட்டணி பற்றி வாயே திறக்காமல் இருந்தார்.. வேறு வழியில்லாமல், நிர்ப்பந்தம் காரணமாகவே கூட்டணி வைக்க நேர்ந்துவிட்டது.. இப்போது அதிமுகவே 60 இடங்களை தாண்டாது என்ற கணிப்புகள் அக்கட்சியை டென்ஷன் ஆக்கி வருகிறது..

பாஜக
எனவே, அண்டி வந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் என்ற வார்த்தை பாஜகவை குறிக்கும் வகையிலேயே வைக்கப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளலாம்.. அல்லது பாஜகவை இனி பகைத்து கொண்டால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால், பாஜகவினால் வெற்றி வாய்ப்பே பறிபோனாலும் "அண்டி வந்தவர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அதிமுக வாழ்வளிக்கும், பாஜகவை அதிமுக எச்சூழலிலும் கைவிடாது அரவணைத்து செல்லும்" என்றும் எடுத்து கொள்ளலாம்.

2016 தேர்தல்
அதேபோல ஜெயக்குமார் சொல்வது போல, 2016 தேர்தல் போல் எந்த மாற்றமும் கடைசி நேரத்தில் வராது.. ஏனென்றால், இது எக்ஸிட் போல்.. வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் இருந்துதான் இது எடுக்கப்படுகிறது.. எனவே, அதிக அளவு வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை... எத்தனையோ எக்ஸிட் போல்கள், இதற்கு முன்பு சரியான புள்ளிவிவரத்துடன் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்களே.. அப்படியே வித்தியாசம் இருந்தாலும் அவை எல்லாம் 5 முதல் 10 இடங்கள்வரைதான்.

ரிசல்ட்
ஆனால், இங்கு இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி வித்தியாசமே 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கிறதே.. ஒரு இடம் என்றால் பரவாயில்லை.. தென் மாவட்டங்களிலும் சறுக்கல், தன் கையில் இருக்கும் கொங்குவிலும் சறுக்கல், ராமதாஸை வைத்து கொண்டே வட மாவட்டங்களிலும் சறுக்கல் என்றால், இதற்கெல்லாம் என்ன காரணம்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், 50, 60, 70 என்ற எக்ஸிட்போல்கள் கூட அதிமுகவுக்கு அதிகம்தான்.. நாளைக்கு ரிசல்ட்டின்போது மற்றவை புரியும்" என்றனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications