Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டை வாங்குறதே கஷ்டம்.. பாஜக நிச்சயம் தோற்கும்.. திமுகவை விட்டுத்தராமல்.. டி. ராஜா ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வியை பயன்படுத்தி மத்தியில் அதிகாரத்தை குவிக்க பாஜக முயற்சிப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளாததால் தமிழகத்துக்கான நிதியை வழங்காதது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் டி.ராஜா.. அப்போது வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்து பாஜகதோல்வியை தழுவும் என்றார்.. தொடர்ந்து மத்திய பாஜகவை கண்டித்தும், விமர்சித்தும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா சொன்னதாவது:

d raja bjp central government cpi

நாட்டின் வறுமை: "சுதந்திர தின விழாவில், 2047-ல் வளர்ந்த 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறப்போகிறது என்று சொன்னார் பிரதமர் மோடி.. ஆனால் இன்னமும் நாட்டின் வறுமை தொடர்கிறது.

ஐநா சபையின் குறிக்கோளை இந்தியா எட்டவில்லை... வேலையில்லா திண்டாட்டமும் பெருகிவிட்டது.. இளைஞர்கள் வேலைக்கு போக முடியாத நிலைமை உள்ளது.. பாஜக அரசும், எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை... விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.. பணவீக்கமும் அதற்கு மேல் உயர்ந்து கொண்டே போகிறது.

கொள்கைகள்: உழைக்கும் மக்களின் நலன் காக்கும் பொருளாதார நாடாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க துணை போகும் கொள்கைகள் தான் இருக்கின்றன... செபியின் தலைவரே அதானி குழுமத்தில் பங்குதாரராக உள்ளார்.. பட்டினி குறியீட்டில் 111-வது இடத்தில் இருக்கிறது நம்முடைய தேசம்.. இதற்காக பிரதமர் அவமானப்பட வேண்டும்.

இங்கு ரேஷன் அட்டையை பெறுவதே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இ-கேஒய்சி பெறுவது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற கொள்கைகளுக்கு எதிராகத்தான், இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தேசம் தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

துண்டு துண்டாக: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை மாநிலம், துண்டு துண்டாக உடைக்கப்பட்டது.. சிறப்பு உரிமைகளும் அங்கு மறுக்கப்பட்டன... பாஜக அரசு பின்பற்றும் காஷ்மீர் கொள்கை படுதோல்வியை கண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் மக்கள் ஆவேசத்துடன் உள்ளனர். நாட்டு நலனில் சிறிதும் அக்கறையில்லாத ஆட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டனர்.. எனவே, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மக்களும் களத்தில் நிற்கிறார்கள்.. எனவே, அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பாஜக தோல்வியடைய போவது உறுதி.

முஸ்லிம் மக்கள்: பாஜக ஆளும் மாநிலங்களில் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன... நம்முடைய அரசியல் சட்டமே மதச்சார்பற்றதாக இருக்கும்போது, அரசியல் சட்டத்தை பாஜக ஆர்எஸ்எஸ் ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்..

அரசியல் மாற்றத்துக்காக மக்கள் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் கொந்தளிப்பான சூழலில் இருக்கிறது. மணிப்பூருக்கு செல்லாமல் பிரதமர் வெளிநாடு செல்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இவர்களை காக்க பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக ஆளுநர்: பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.. "இந்தியா கூட்டணி" ஆட்சியமையும்போது கொள்கைகளை மறுவரை செய்ய நடவடிக்கை எடுப்போம். தோழமையோடு செயல்பட்டாலும் சறுக்கல் ஏற்படும்போது சுட்டிக்காட்ட நாங்கள் தயங்கியதில்லை. தமிழக ஆளுநர் முன்வைக்கும் கருத்துகள் அபத்தமாக உள்ளன.. தமிழகம் மட்டுமின்றி கேரளா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநில ஆளுநர்களும் இதுபோலவே செயல்படுகிறார்கள்.. அந்தவகையில், ஆளுநர் பதவி என்பதே தேவையற்றது.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடினார்கள்.. அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை இன்னமும் நீடிக்கிறது. இதுகுறித்து பிரதமர் கருத்தும் தெரிவிக்கவில்லை, அதைப்பற்றி கவலைப்படவுமில்லை.

திமுக கூட்டணி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்திருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி... இந்த தேர்தல் முடிவு அரசியல் ரீதியாக பாஜகவுக்கு தோல்வியை கொடுத்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்கே புதிய நம்பிக்கையை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள்.. பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அவர்களின் ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது. 400 இடங்கள் கிடைக்கும், பாஜவுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் பிரதமர் சொன்ன நிலையில், பாஜகவால் அறுதிப்பெரும்பான்மை கூட பெற முடியவில்லை.

நிச்சயம் தோல்வி: நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கின்றனர். இந்த ஆட்சி நிலையாக இருக்கப்போகிறதா என்பதே கேள்விக்குறி. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக நிச்சயம் தோல்வியை சந்திப்பது உறுதி. விவசாயிகள் போராட்டங்களில் ஹரியானா மக்கள், முன்னணியில் இருந்தனர். இப்போதும் ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மத்தியில் ஆவேசம் அடங்காமல் உள்ளது..

தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசினார்கள்.. வாக்குக்காக தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு பற்றி பேசிய பாஜக, தமிழக மீனவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தமிழக மீனவர்களின் அவல நிலையை பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.. அப்படியானால், இவர்கள் பின்பற்றும் வெளிநாட்டுக் கொள்கை எப்படிப்பட்ட கொள்கையாக இருக்கிறது? அத்தகைய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

புறக்கணிப்பு: இயற்கை பேரிடரால் நிறைய மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.. கேரளாவுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகும்கூட, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. இப்போது ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த பாதிப்பை சமாளிக்க போதிய உதவிகளை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

கல்வியை பயன்படுத்தி மத்தியில் அதிகாரத்தை குவிக்க பாஜக முயற்சிக்கிறது... தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளாததால் தமிழகத்துக்கான நிதியை வழங்காதது கண்டிக்கத்தக்கது. பாஜகவின் வெளிநாட்டு கொள்கை தோல்வியை தழுவியுள்ளது. சொந்த நாட்டு மக்களின் நலனை பாஜக புறக்கணிக்கிறது" என்றார் மூத்த தலைவர் டி.ராஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+