இதை மட்டும் திமுக செஞ்சா.. ஸ்டாலின் முதல்வராவது ஈஸி.. வாக்குகளை லட்டு போல அள்ளலாம்.. கனவும் நனவாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இப்போதைக்கு இந்த 2 விஷயங்களை செய்தால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும், ஸ்டாலினும் முதல்வர் ஆவார் என்ற நிலைமையும், சூழலும் ஏற்பட்டுள்ளது!

வரும் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்... இதுவரை துரைமுருகன் மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், ஒருமனதாக அவரே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

அப்படி தேர்வு செய்யப்பட்டால், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகனை தொடர்ந்து, திமுகவின் 4வது பொதுச்செயலாளராக பெருமை சேர்ப்பார் துரைமுருகன்.

திமுக

திமுக

அதேசமயம், பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு, ஏ.வ.வேலு, ஆ.ராசா ஆகிய 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது! இதெல்லாம் அனுமானத்திலேயே இப்படி சொன்னாலும், இந்த விஷயத்தை இரு வகைகளில் அணுக வேண்டி இருக்கிறது.. ஒன்று அரசியல் சூழல், மற்றொன்று வரப்போகிற தேர்தல்!

வாக்குகள்

வாக்குகள்

சாதி அரசியல் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக தமிழகத்தில் உருவாகி வருகிறது.. இதற்காகவே சில சாதிக்கட்சிகளும் உருவாகி, தேர்தலில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டு வங்கியை பெற்றுள்ளதே அதற்கு சாட்சி.. இந்த சாதிக்கட்சிகளை அதிமுக, திமுக என்ற இரு பெரும் பிம்பங்கள் ஆளுக்கு ஒன்றாவது தங்கள் பக்கம் இழுத்து பிடித்து கூட்டணி வைத்து வருவதையும் கண்கூடாக கண்டு வருகிறோம்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

தற்போது திமுகவில் இரு பெரும் பொறுப்புகளான பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளை நிரப்ப தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரும் முதன்மையாக அடிபடுகின்றன.

 துரைமுருகன்

துரைமுருகன்

பொதுச்செயலாளர் பதவி.. இதற்கு பொருத்தமானவர் துரைமுருகனே.. கட்சியின் சீனியர்.. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து கூப்பிட்டபோதும், அவர் பக்கம் போகாமல், ஒரே தலைவர் கருணாநிதி என்று துணிந்து சொல்லி, அதன்படியே இந்த நிமிஷம் வரை அர்ப்பணித்து கொண்டு இருப்பவர்.. தவிர, இவர் சார்ந்த வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் துரைமுருகனுக்கும் ஒரு நல்ல சாப்ட் கார்னர் உண்டு.

 டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தை பொறுத்தவரை 2 பெரும்பான்மையான சாதிகளில் ஒன்று வன்னியர்கள்.. இவர்கள்தான் தமிழகத்தின் ஒரு பகுதி வாக்குகளை தீர்மானிப்பவர்கள்.. இந்த வாக்கு வங்கி பெரும்பாலும் டாக்டர் ராமதாஸ் பக்கமே இருக்கும். அவர் எந்த கூட்டணியில் இருக்கிறாரோ, அந்த கூட்டணிக்கு அது பலம் தரும் அளவுக்கு வன்னிய செல்வாக்கை பெற்றுள்ளார்..

 சாதி அடையாளம்

சாதி அடையாளம்

இப்போதைய சூழலை வைத்து பார்த்தால், பாமக திமுகவுடன் கூட்டணி வைக்காது என்றே தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில் துரைமுருகனுக்கு கட்சியின் மிக உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியை கொடுத்த, வன்னிய சமுதாயத்தினரின் அன்பைப் பெற திமுக முயலலாம். அதேசமயம், சாதி அடையாளத்தைத் தாண்டி இந்தப் பதவிக்கு தகுதியானர் துரைமுருகன் என்பதையும் மறந்து விடக் கூடாது. வேல்முருகன் ஆதரவால் ஓரிரு மாவட்டங்களில் மட்டுமே வன்னிய வாக்கை பெற முடியும்.. எனவே இந்த தேர்தலை கருத்தில் கொண்டு பார்த்தால் துரைமுருகன் பெஸ்ட் ஆப்ஷன்.

 எவ வேலு

எவ வேலு

அடுத்ததாக பொருளாளர் பதவிக்கு மொத்தம் 3 பேர் அடிபடுகிறார்கள். இதில், எவ வேலு பெயர் பலமாகவே அடிபடுகிறது.. இவர் சீனியர் என்றாலும், ஸ்டாலினின் குடும்பத்தினரின் ஆதரவு பெற்றவர் என்றாலும், சாதி ஓட்டுக்கள் இவருக்கு குறைவுதான்.. தமிழகத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ள சமூகத்தின் ஓட்டுக்காக, வேலுவுக்கு அவ்வளவு பெரிய பொறுப்பை தருவது சிறந்ததாக இருக்காது என்பதே உடன்பிறப்புகளின் எண்ணமாக உள்ளது.. அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து வந்தவர் என்ற பிம்பம் அவரை விட்டு போகவே இல்லை.. அதிமுகவில் இருந்தபோது, திமுகதான் கள்ளச்சாராயத்தை அறிமுகப்படுத்தியது என்று அவர் பேசியதை இப்போது அவருடைய எதிர்ப்பாளர்கள் திமுக தலைமைக்கு நினைவுபடுத்தி வருகின்றனர்.

 தலித் ஓட்டுக்கள்

தலித் ஓட்டுக்கள்

அதேபோல ஆ.ராசாவை பொறுத்தவரை படிப்பாளி.. அறிவாளி.. தன் மீதான வழக்கு விசாரணையிலும், நானே நேரில் ஆஜர் ஆகி வெளியே வந்தவர்தான்.. குற்றமற்றவர் என்று நிரூபித்து கொண்ட அசாத்திய திறமைசாலிதான்.. ஆனால், அவர் இப்பதவிக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார். போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லி விட்டார். எனவே இதில் விவாதத்துக்கு ஏதுமில்லை. ஆனால் ராசா, தலித் சமுதாயத்தினர் மத்தியில் தனி இடம் பெற்றிருப்பவர் என்பதை மறந்து விடக் கூடாது. மிகத் தெளிவாக பேசக் கூடியவர் என்ற நல்ல பெயரும் இவருக்கு உண்டு.

 செல்வாக்கு

செல்வாக்கு

அப்படியென்றால், பொருளாளர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்றால் டிஆர் பாலுவையே சொல்லலாம்.. அரசியல் அனுபவம் நிறைய உள்ளது.. கருணாநிதி காலத்தில், தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே பாலமாக இருந்து திமுக வளர்ச்சிக்கு உதவியவர்.. முரசொலி மாறனுக்கு பிறகு டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர்.. கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டிஆர்பாலு... பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் ஓட்டுக்களையும் தன் பக்கம் சாய்த்துவிடுவார்.

பொருத்தம்

பொருத்தம்

தற்போதைய சூழலில் டி.ஆர்.பாலுதான் பொருளாளர் பதவிக்கு வருவார் என்றே தோன்றுகிறது. பொருளாளராக டிஆர் பாலுவும், முதன்மை செயலாளராக துரைமுருகனும் நியமிக்கப்பட்டால் மட்டுமே திமுக இந்த முறை தேர்தலில் தப்பும்.. வாக்குகளை மானாவாரியாக அள்ளி ஸ்டாலின் முதல்வராகவும் பதவியில் உட்கார முடியும் என்பதே தற்போதைய கள நிலவரம்.. இல்லாவிட்டால் திமுகவில் எதிர்ப்புகளும், பிளவுகளும் நிறைய வர வாய்ப்பு ஏற்படும்.. !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+