சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 பேரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி! டிடிவி + ஓபிஎஸ் + சசிகலா.. சட்டுனு மாறும் ரூட்.. அதிமுக அப்செட்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா ரகசியமாக சில அரசியல் மூவ்களை மேற்கொண்டு வருவதாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் நடக்கும் மோதல்களை தொடக்கத்தில் இருந்தே சசிகலா கூர்மையாக கவனித்து வருகிறாராம். கட்சியை கைப்பற்ற இவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் வெண்ணை தானாக திரண்டு வருவது போல.. அவர் எதுவும் செய்யாமலே அதிமுகவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற இபிஎஸ் - ஒபிஎஸ் இடையிலான மோதல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதிமுகவில் மீண்டும் கால் பதிக்க முடியும் என்று சசிகலா நம்புகிறாராம்.

ஒருபக்கம் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் இபிஎஸ்..! தூக்கியெறியும் தொண்டர்கள்! போட்டோ உடைப்பு! தடதட அதிமுக..! ஒருபக்கம் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் இபிஎஸ்..! தூக்கியெறியும் தொண்டர்கள்! போட்டோ உடைப்பு! தடதட அதிமுக..!

இரண்டு பிளான்

இரண்டு பிளான்

இந்த மோதல் ஜாதி ரீதியாக வெடித்துவிட்டதாக சசிகலா தரப்பு நம்புகிறதாம். கடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதை சசிகலா தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறார். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த சில தலைவர்களும் அப்போது சசிகலா வீட்டில் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதை பார்த்து உள்ளனர். ஓபிஎஸ் இப்படி அவமதிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.சாதி ரீதியாக அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர் என்றாலும் இதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

 தென் மாவட்டம்

தென் மாவட்டம்

ஏற்கனவே அதிமுகவில் தென் மாவட்ட மக்களுக்கு, நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. வட தமிழ்நாடு, கொங்கு மண்டல அதிமுகவினருக்குத்தான் மரியாதை உள்ளது. அதிலும் 1- 2 ஜாதியினருக்கு மட்டும்தான் மரியாதை. இப்போது ஓபிஎஸ்ஸையும் இப்படி அவமதித்து அனுப்பி உள்ளார்கள் பாருங்கள் என்று அந்த நிகழ்வை சுட்டிக்காட்டி சசிகலா வீட்டில் சில "சமூக" நிர்வாகிகள் குமுறி இருக்கிறார்களாம். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக இரண்டு விதங்களில் பயன்படுத்த சசிகலா முடிவு செய்துள்ளார் எனப்படுகிறது.

Recommended Video

    சிரிப்போடு வந்த OPS! Delhi Hotel-ல் நடந்தது என்ன?
    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    முதல் விஷயம் - ஓபிஎஸ்ஸுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி, அவருக்கு கீழ் தென் மண்டல நிர்வாகிகளை கொண்டு வருவதுதான் திட்டமாம். முக்கியமாக ஜாதி ரீதியாக அவருக்கு கீழ் நிர்வாகிகளை கொண்டு வர வேண்டும். தென் மண்டலத்தில் ஓபிஎஸ் பலத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் ஓபிஎஸ்ஸை மீண்டும் எழுச்சி பெற செய்ய வேண்டும் என்று சசிகலா நினைக்கிறாராம். ஓபிஎஸ் எழுச்சி பெற்றால் அதன் மூலம் அவருக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ஸ் வரும்.. அதன் மூலம் தனக்கும் அதிமுகவில் இடம் இருக்கும் என்று சசிகலா நம்புகிறாராம்.

     3 பேர்

    3 பேர்

    இது நடக்காமல் போய்.. ஒருவேளை ஓபிஎஸ் தன்னை போலவே ஓரம்கட்டப்பட்டால்.. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா என்ற ஓரங்கட்டப்பட்ட முக்கிய புள்ளிகள் இணைத்து ஒன்றாக செயல்படவும் வாய்ப்புகள் உள்ளதாம். இவர்கள் ஒன்றாக செயல்பட்டால் அவர்களுக்கு என்று கணிசமான ஆதரவு இருக்கும். அதோடு சமூக ரீதியாக பெரிய ஆதரவு இருக்கும். இவர்கள் சமூக ரீதியாகவும், எடப்பாடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியிலும் இணைவதால் அது அதிமுகவிற்கு அப்செட்டை ஏற்படுத்தும் என்று சசிகலா தரப்பு தீவிரமாக நம்புகிறதாம். இந்த இரண்டில் ஒன்று கண்டிப்பாக விரைவில் நடக்கும் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தினர்.

    சசிகலா

    சசிகலா

    ஆனால் சசிகலா எடுத்த முயற்சிகள் எதுவும் அரசியல் ரீதியாக இதுவரை வென்றதே இல்லை. தென் மாவட்ட நிர்வாகிகளுடன் அவரின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அவரின் 3 ஆன்மீக சுற்றுப்பயணமும் தோல்வி அடைந்தன. அதன்பின் ஓ ராஜா மூலம் தனக்கான ஆதரவை அதிமுகவில் நிலைநாட்ட அவர் செய்த முயற்சிகளும் தோல்வி அடைந்தது. இப்படி இருக்க ஓபிஎஸ் மூலம் மட்டும் அவர் என்ன பெரிதாக சாதித்து விடுவார்.. எப்படி கட்சியை மீட்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது!

    English summary
    Will O Pannerselvam TTV Dinakaran Sasikala fraction join hands together to oppose Edappadi Palanaisamy rise? அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா ரகசியமாக சில அரசியல் மூவ்களை மேற்கொண்டு வருவதாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X