ரேஷனில் இனி "இதையும்" தர்றாங்களா? ஏற்கனவே தேங்காய், அப்பறம் கரும்பு.. இப்ப இது.. தமிழக அரசு முடிவு?
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகளும் எகிறி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கரும்பு பயிரிடும் விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியுமா? கரும்பு முழுவதும் விற்குமா என்ற நிலையில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு: கடந்த சில வருடங்களாகவே, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.. ஆனாலும் கொரோனா பாதிப்பு காலங்களில், பன்னீர்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டனர்.
முக்கியமாக, 6 அடி உயரமுள்ள கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டதால் விவசாயிகளுக்கு மறுபடியும் சிக்கல் ஏற்பட்டது.. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா என்ற நிலைமை ஏற்பட்டது. இதற்காக விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இப்போது பொங்கல் நெருங்குகிறது..
பரிசு தொகுப்பு: எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து, அரசே கொள்முதலும் செய்து, பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் விடுத்துள்ளனர்.. அத்துடன், 6 அடி நீளம் கரும்பு கொள் முதல் என்பதில் தளர்வு செய்ய வேண்டும் என்ற இன்னொரு கோரிக்கையையும் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் விடுத்து வருகிறார்கள்.
இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கையும் சேர்க்க வேண்டும் என்று இன்னொரு கோரிக்கை கிளம்பி உள்ளது.. வழக்கமாக, ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம். எனவே, இப்போது பனங்கிழங்குகள் அறுவடை துரிதமாகி உள்ளது.
கோரிக்கை: ஆனால், பனை தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி - இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..
எனவே, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதை போலவே, இந்த வருடம் பனங்கிழங்குகளை அரசே தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
ரேஷனில் பனங்கிழங்கு: அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளிலும் பனங்கிழங்கை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத்தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்றும் பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், வேடப்பட்டி, விருசம்பட்டி, புளியங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேங்காய்: ஏற்கனவே, தமிழக தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும் என்று ஏற்கனவே விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், பனங்கிழங்கும் ரேஷனில் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications