'ஆயிரம் இருக்கு.. அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரப்போகுது' .. ரகசியங்களை உடைக்கும் ஓபிஎஸ்.. பின்னணி
இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்.. கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமைகாத்தோம், மக்களை சந்திக்கும்போது ரகசியங்களை வெளியிடுவோம் என ஓ பன்னீர்செல்வம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
சென்னை: ஆயிரம் உள்ளது.. அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்.. கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமைகாத்தோம், மக்களை சந்திக்கும்போது ரகசியங்களை வெளியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பொங்கியிருக்கிறார். இனி அதிமுகவில் என்னென்ன விஷயங்கள் வெளியவரும்? அம்பலமாகப் போகிறதா ரகசியங்கள்? என்பது கேள்வியாக உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக தீர்ப்பு வந்த நிலையில், அவருக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து நடத்தி வந்த சட்டப்போராட்டம் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்திருப்பதாக கருதுகிறது.

ஜூலை 11
தற்போதைய நிலையில் ஜூலை 11ல் பொதுக்குழு கூடியது செல்லும் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 11ல் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சிவில் கோர்டை நாடலாம் என்றும், அதற்கும், இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சிவில் கோர்ட்டில் எடுக்கப்படும் முடிவினை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

சிவில் வழக்கு
இதனால் ஒரு பக்கம் கவலை அடைந்தாலும் மறுபக்கம் இன்னொரு வாய்ப்ப உள்ளதாக கருதி ஓ பன்னீர்செல்வம் டீம், மீண்டும் சட்டப்போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. இதனிடையே உச்ச நீதிமன்றத்திலேயே பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்துவிட்டது, சிவில் வழக்கை பார்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கனவான ஒற்றை தலைமை நினைவாகி வருகிறது. தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார்.

ரகசியங்கள் வெளியிடுவோம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான வார்த்தைகள பிரயோகித்தார். அதிமுக என்ன எடப்பாடி பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சியா என்றும் ஆணவத்தின் உச்சத்தில் எடப்பாடி இருப்பதாகவும், அந்த ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் ஓபிஎஸ் கூறும் போது, எந்த தீர்ப்பும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு வந்தபின்னர் தான் எங்கள் தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எடப்பாடி அணி தான் திமுகவின் ஏ டு இசட் டீம். எங்களை நோக்கி எதாவது தவறு கூற முடியுமா? ஆயிரம் உள்ளது அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமைகாத்தோம். போகப்போக தெரியும்.. மக்களை சந்திக்கும் போது ரகசியங்களை வெளியிடுவோம்" என்று ஓபிஎஸ் கூறினார்.

ஆடியோக்கள் வருமா?
ஓ பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக ஏற்கனவே ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அண்மையில் கேபி முனுசாமி பணம் கேட்பது போன்று ஆடியோவை வெளியிட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து ஆடியோக்களோ அல்லது வீடியோக்களையோ ஓபிஎஸ் டீம் வெளியிடுமா என்ற கேள்வி எழுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு குறித்த ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக ஓ பன்னீர்செல்வமே அறிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தயராகும் இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்கு ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது ஒற்றுமையாக இருந்தார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பின், கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற போட்டி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார். இந்நிலையில் "ஆயிரம் உள்ளது அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமைகாத்தோம். போகப்போக தெரியும்.. மக்களை சந்திக்கும் போது ரகசியங்களை வெளியிடுவோம்" ஓபிஎஸ் கூறியிருப்பதால் அதிமுகவில் விரைவில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வரலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பும் பதிலடிக்கு தயாராகவே உள்ளதாம்.












Click it and Unblock the Notifications