Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிகிதாவை கைது செய்தாலும் சிக்கல்.. கைது செய்யாவிட்டாலும் சிக்கல்.. அமைதியின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவலாளி அஜித்குமார் மீது புகார்கள் சொன்ன நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். குறிப்பாகவே வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக உறவினர்கள் உள்பட சிலர் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் நிகிதா விஷயத்தில் சிக்கலான நிலையை அரசு சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அவரை கைது செய்தாலும் சிக்கல் தான் என்றும்.. கைது செய்யாவிட்டாலும் சிக்கல் தான் என்றும் கூறப்படுகிறது. அதுபற்றி பார்ப்போம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமாருக்கும், நிகிதாவிற்கு இடையே பார்க்கிங்கிற்கு பணம் கேட்டது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது.அந்த சண்டையை தொடர்ந்து பார்க்கிங்கில் காரை நிறுத்திய அஜித்குமார் மீது நகையை திருடிவிட்டதாக போலீசில் சந்தேகத்தின் பேரில் நிகிதா புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Will Tamil Nadu govt face issues whether Nikitha is arrested or not Here s what the verdict means

வழக்குகள்

இந்நிலையில் நிகிதாவும் அவரது அம்மாவும், தங்களுக்கு முக்கிய பிரமுகரின் உதவியாளரை தெரியும் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி சிலரை ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். 2010-ம் ஆண்டு சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2010ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

மோசடி புகார்

இதேபோல் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தர்களையும் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக நிகிதா கடந்த 2010-ம் ஆண்டு ரூ.9 லட்சம் பெற்று வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக தெய்வம் என்பவர் குற்றம்சாட்டினார். . இதேபோல் வினோத் என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்காக ரூ.7 லட்சம் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

உதவி கலெக்டர் மகள்

துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயப்பெருமாள் என்பவரின் மகளான நிகிதா, முக்கிய பிரமுகர்கள், அவருடைய உதவியாளர்களை, தங்களுக்கு தெரியும் எனக்கூறி பலரையும் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. 3 முறை விவாகரத்து ஆனவர் என்றும், தன்னை நிகிதா ஏமாற்றிவிட்டதாகவும் தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சி தலைவர் திருமாறனும் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது திருப்புவனத்தில் நகை திருட்டு போனதாக கூறி இருப்பதுகூட பொய்யான தகவலாக இருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.

கைது செய்தால் சிக்கல்

ஒருவேளை வேலைவாய்ப்பு மோசடி புகார்கள் உண்மை என்கிற பட்சத்தில் நிகிதாவை போலீசார் கைது செய்ய முடியும். தற்போதைய நிலையில் நிகிதாவை கைது செய்தால், அவரது புகாரை முறையாக விசாரிக்காமல் அஜித்குமாரை போலீசார் தாக்கியது உறுதியாகிவிடும். அஜித்குமார் விவகாரத்தில் அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை என்பதை அரசே உறுதி செய்வது போல் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

கைது செய்யாவிட்டாலும் சிக்கல்

அதேபோல் நிகிதாவை கைது செய்யாமல் விட்டாலும், பலரது விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டிய நிலையில் அரசு தர்ம சங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது காவலாளி அஜித்குமா வழக்கை நீதிபதி நேரடியாக விசாரித்து வருகிறார். எனவே புகார் அளித்த நிகிதாவை நேரடியாகவே நீதிபதி விசாரிப்பார் என தெரிகிறது. விசாரணை முடிவில் தான் நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையா அல்லது வேறு என்ன என்பது தெரியவரும். அதேநேரம் வேலைவாய்ப்பு மோசடி புகாரில் ஏன் நிகிதா கைது செய்யபடவே இல்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+