Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஒரே போன் காலில் ரூ.25 லட்சம் சம்பாதித்த தீபா.. மந்தைவெளி தொழிலதிபர் ஏமாந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலர் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் இருந்து தொடர்பு கொண்டு கவர்ச்சிகரமாக முதலீடு குறித்து பேசுகிறார்கள். ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கையாக பேசுவார்கள்.. இந்த வலையில் சிக்குவோரை நம்ப வைக்கும் விதமாக முதலில் சிறிய தொகை அளிப்பார்கள். இதை பார்த்து அவர்கள் அதிக தொகையை முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்த பணத்தை மொத்தமாக சுருட்டிவிடுவார்கள்.. அப்படியாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபரிடம் 25 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைனில் முதலீடு என்ற பெயரில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். சென்னை மந்தைவெளியை சேர்ந்த 44 வயதாகும் சுதா கார்த்திக் என்பவர் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். இவர் தொழில் அதிபராகவும் உள்ளார். சுதா கார்த்திக் அண்மையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் முதலீடு மோசடி தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்தார்.

Woman arrested for defrauding businessman of Rs 25 lakhs in Chennai s Mandaveli

அந்த புகார் மனுவில் சுதா கார்த்திக் கூறுகையில், என்னுடைய 'வாட்ஸ்-அப்' எண்ணில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் 'ஆன்லைன்' வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமாக பேசினார். அதை நம்பி ரூ.25 லட்சம் முதலீடு செய்தேன்.ஆனால் இதில் மோசம் போய்விட்டேன். அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஆன்லைன்' மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 26 வயதாகும் தீபா என்ற பெண்ணை கைது செய்தனர்.

அவரை, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பெங்களூருவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு துணையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. தீபா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் கூறினார்கள்.


டிஜிட்டல் கைது முறையில் மிரட்டி பெண் இன்ஜினியரிடம் ரூ.32 கோடி பறிப்பு

பெங்களூரு இந்திராநகரில் 57 வயதாகும் பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் பிரபல ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி மும்பை அந்தேரியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் அப்பெண்ணிடம் பேசினார். அப்போது உங்களது பெயரில் 3 சிம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், 4 பாஸ்போர்ட்டுகள் மற்றும் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல் வந்திருப்பதாக கூறியிருக்கிறார்

அது தன்னுடையது இல்லை என்று கூறி அந்த பெண் மறுத்தபோதும், இது சைபர் குற்றம் என்று கூறி எதிர்முனையில் பேசிய நபர் மிரட்டி உள்ளார். அந்த பெண் மற்றும் அவரது சொத்து குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள், அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறினர். இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிந்தால், உங்களது குடும்பத்தினரையும் வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என்றும் மர்ம நபர்கள் அப்பெண்ணை மிரட்டி உள்ளார்கள்.

இவ்வாறாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களாக அந்த பெண்ணை மிரட்டி ஒட்டு மொத்தமாக ரூ.31 கோடியே 83 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்தனர். இதுபற்றி கடந்த 14-ந்தேதி பெங்களூர் கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+